மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உலக சுகாதார நிறுவனம் (WHO) கோவிட்-19 வெடித்ததை ஒரு உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்து இன்று ஒரு வருடமாகின்றது.
உலக சுகாதார அமைப்பின் பொதுஇயக்குநர் Tedros Adhanom Ghebreyesus 2020 மார்ச் 11 அன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது உலகளவில் 14 நாடுகளில் 118,000 தொற்றுக்குகள் பதிவாகியிருந்ததுடன், 4,291 பேர் இறந்திருந்தனர். "இந்த வெடிப்பை உலக சுகாதார அமைப்பு முழுநாளும் மதிப்பிடுகிறது, மேலும் ஆபத்தான அளவு பரவல் மற்றும் தீவிரத்தன்மை மற்றும் எச்சரிக்கையூட்டும் அளவிலான செயலற்ற தன்மை ஆகியவற்றால் நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்" என்று அவர் கூறினார். "நாடுகள் அவசரமான மற்றும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று அவர் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்தார். நாங்கள் எச்சரிக்கை மணியை பலமாகவும் சத்தமாகவும் தெளிவாகவும் ஒலித்தோம்.” என்றார்.
சில விதிவிலக்குகளுடன், இதில் சீனா மிகவும் குறிப்பிடத்தக்கதாகும் - முக்கிய முதலாளித்துவ நாடுகளின் அரசாங்கங்கள் விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளை நிராகரித்தன. அவர்கள் தீவிரமான நடவடிக்கை எடுக்காத்துடன், எச்சரிக்கை மணிகள் கவனிக்கப்படாமல் போயின. கடந்த 12 மாதங்களில், உலகளாவிய தொற்றுக்குகளின் எண்ணிக்கை 118,000 இலிருந்து 118 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்தது. இறப்பு எண்ணிக்கை அமெரிக்காவில் 540,000, பிரேசிலில் 270,000, மெக்ஸிகோவில் 191,000, இந்தியாவில் 158,000, இங்கிலாந்தில் 125,000 மற்றும் இத்தாலியில் 100,000 உட்பட, 4,000 இலிருந்து 2.6 மில்லியனாக அதிகரித்துள்ளது.
தொழிலாள வர்க்கத்தின் பொருளாதார துன்பம் பேரழிவானதாக உள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2020 ஆம் ஆண்டில் 255 மில்லியன் வேலைகளுக்கு சமமானதை உலகம் இழந்தது என்று மதிப்பிட்டுள்ளது. இது 2009 உலக நிதி நெருக்கடியின் தாக்கத்தைவிட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம். எண்ணற்ற சிறு வணிகங்கள் அழிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கலாச்சார வாழ்க்கை அழிந்துவிட்டது.
தொற்றுநோயின் ஒரு ஆண்டு நிறைவை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் இன்று இரவு ஒரு முக்கிய உரையாற்றுவார். கடந்த பன்னிரண்டு மாதங்களில் ஏற்பட்ட துன்பகரமான உயிர் இழப்பு குறித்த கட்டாய மற்றும் நேர்மையற்ற வார்த்தைகளை இந்த பேரழிவு ஏன் நிகழ்ந்தது, ஏன் தொடர்கிறது என்பதற்கான தீவிர ஆய்வு இல்லாமல் அவர் வழங்குவார் என்பதில் சந்தேகமில்லை. வெள்ளை மாளிகை அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர் "இயல்புக்கு திரும்புவது"பற்றி பேசுவார்.
எவ்வாறாயினும், "இயல்பு நிலைக்கு" திரும்ப முடியாது. கோவிட்-19 தொற்றுநோய்க்கான உலகளாவிய பிரதிபலிப்பு குறிப்பிட்ட அரசாங்கங்களின் நடவடிக்கைகள் மட்டுமல்ல, முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட முழு சமூக மற்றும் பொருளாதார ஒழுங்கின் மீதான அழிவுகரமான குற்றச்சாட்டு ஆகும். இது மிகவும் நீண்டகால தாக்கங்களை கொண்ட மற்றும் புரட்சிகர விளைவுகளை ஏற்படுத்தும்.
பெருநிறுவன-நிதிய தன்னலக்குழுவின் நலன்களுக்கு மனித வாழ்க்கையை அடிபணிய வைக்கும் முடிவுகளின் விளைவே தொற்றுநோயின் தாக்கமாகும். முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் கடுமையான எதிர்ப்பை ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்கொள்ள உயிர்களைக் காப்பாற்ற தேவையான அவசர பொது சுகாதார நடவடிக்கைகள் அவசியமாகும்.
2020 ஜனவரி-மார்ச் மாதத்தின் முக்கியமான காலம், அந்நோய் ஏற்படுத்தும் ஆபத்து குறித்த தகவல்களை திட்டமிட்டு அடக்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்டது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதிகரித்தளவில் தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற வாகன ஆலைகள் மற்றும் பிற வேலை தளங்களுக்குள் நுழைய மறுத்த பின்னரே, வரையறுக்கப்பட்ட பூட்டுதல்கள் செயல்படுத்தப்பட்டன.
இந்த நடவடிக்கைகள் ஒருபோதும் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த எந்தவொரு மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. மாறாக, 2008 க்குப் பின்னர் இரண்டாவது முறையாக பணக்காரர்களுக்கு பாரிய பிணை எடுப்பை ஆளும் வர்க்கம் நடைமுறைப்படுத்துவதற்கான நேரத்தை எடுத்துக்கொள்வதற்கு அங்குமிங்குமான தேசிய மற்றும் உள்ளூர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அமெரிக்காவில், கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இரு கட்சி அடிப்படையில் நிறைவேற்றப்பட்டு CARES சட்டத்தால் அனுமதிக்கப்பட்டு, பெடரல் ரிசர்வ் 4 டிரில்லியன் டாலர்களை சந்தைகளில் செலுத்தியது. இதே போன்ற நடவடிக்கைகள் உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளால் பின்பற்றப்பட்டன.
ஆளும் வர்க்கத்தின் நலன்கள் பாதுகாக்கப்பட்டவுடன், மூடப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் பள்ளிகளை மீண்டும் திறக்க அரசாங்கங்கள் ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை மேற்கொண்டன. சுவீடனில் முன்னோடியாக இருந்த "சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்" மூலோபாயம் முழு ஆளும் வர்க்கத்தின் கொள்கையாக மாறியது. “சிகிச்சை நோயை விட மோசமாக இருக்க முடியாது” என்ற முழக்கத்தின் கீழ், வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான மிக அடிப்படையான நடவடிக்கைகள் முறையாக அகற்றப்பட்டன.
மில்லியன் கணக்கான மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாலும், நிதிச் சந்தைகள் வரலாற்றில் பங்கு மதிப்புகள் மிக விரைவாக உயர்ந்ததைக் கொண்டாடின. ஒரு தகவல் இந்த சமூக இயக்கத்தைச் சுருக்கமாகக் கூறுகிறது: ஒரு வருடம் முன்பு தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, அமெரிக்க கோடீஸ்வரர்கள் தங்கள் செல்வத்தை 1.4 டிரில்லியன் டாலர் அதிகரித்துள்ளனர். மரணம் மற்றும் துன்பங்களுக்கு மத்தியில் "தொற்றுநோய்களால் இலாபமடையும்" ஒரு புதிய அடுக்கு செல்வந்தராகியுள்ளது.
ஒரு தொற்றுநோய் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒரு வருடம் கழித்து உலகம் முழுவதும் சீற்றம் தொடர்கிறது. ஒரு தடுப்பூசியின் ஆரம்ப உற்பத்தியுடன் கூட, அதன் குழப்பமான விநியோகம், போட்டியிடும் தேசிய அரசுகளின் நலன்களால் தடைப்பட்டு, நெருக்கடிக்கு ஒரு காரணியாகிறது. உலக மக்கள்தொகையில் 4 சதவிகிதத்தினர் மட்டுமே தடுப்பூசியின் முதல்கட்டத்தை பெற்றுள்ளனர், மேலும் பல வளர்ந்த நாடுகளில் கூட, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மக்கள்தொகையின் சதவீதம் ஒற்றை இலக்கங்களில் உள்ளது.
முதலாளித்துவ செயல்திறனின் முன்மாதிரியாகக் கூறப்படும் ஜேர்மனியில், 3.1 சதவிகித மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்படுகிறார்கள். ஸ்பெயின் மற்றும் பிரான்சில் 3.0 சதவிகிதம், இத்தாலியில் 2.9 சதவிகிதம், கனடாவில் 1.6 சதவிகிதம் ஆக உள்ளது.
மேலும் தொற்றக்கூடிய திரிபுகளால் உந்தப்பட்டு மாறுபாடுகளால் ஒரு புதிய தொற்று எழுச்சி பற்றிய எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மீதமுள்ள எந்த நடவடிக்கைகளையும் கைவிடுகின்றன. நேற்று, அமெரிக்க மாநிலமான டெக்சாஸ் பொருளாதார நடவடிக்கைகளுக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியது. அதே நேரத்தில் பைடென் நிர்வாகம் பள்ளிகளை மீண்டும் திறக்கும் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்குகிறது.
எதுவும் செய்ய முடியாது என்ற கூற்றுக்களை மிகவும் தீர்க்கமாக மறுப்பது உலக சோசலிச வலைத் தளத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பொதுவில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வெளியீடான உலக சோசலிச வலைத் தளம், ஒரு வருடத்திற்கு முன்பு தொடர்ச்சியான அறிக்கைகளை வெளியிட்டு, என்ன வரப்போகிறது என்று எச்சரித்து அவசியமான வேலைத்திட்டரீதியிலான பதிலை விவரித்துக் கூறியது.
மார்ச் 13 அன்று, ஒரு தொற்றுநோயை உத்தியோகபூர்வமாக அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர், WSWS ஆளும் வர்க்கத்தின் பதிலைக் குறித்தது. "உலகளாவிய தொற்றுநோய் அபாயகரமான வேகத்துடன் பரவுகையில் விலைமதிப்பற்ற நேரம் வீணடிக்கப்பட்டது." "உலக உழைக்கும் மக்களின் தேவைகளுக்கு பெருநிறுவன இலாபம் மற்றும் தனியார் செல்வக் குவிப்பு ஆகியவற்றின் அனைத்து விடயங்களை விட முழுமையான மற்றும் நிபந்தனையற்ற முன்னுரிமையை வழங்கவேண்டும்" என்று வலியுறுத்திய WSWS, சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த சமூக வளங்களை அணிதிரட்டுதல் மற்றும் அத்தியாவசியமற்ற உற்பத்தியை மூடுவது மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு வருமானம் உள்ளிட்ட அவசர நடவடிக்கைகளை கோரியது.
தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் ஒருபோதும் ஒரு மருத்துவ பிரச்சினை மட்டும் அல்ல. முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு அப்பாற்பட்டு தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியாது.
இந்த குணாம்சத்தை கொண்டுள்ள ஒவ்வொரு நெருக்கடியையும் போலவே, தொற்றுநோய் முழு அரசியல் சூழ்நிலையையும் ஆழமாக மாற்றியுள்ளது. இது ஜனநாயக ஆட்சியின் நீண்டகால அழிவை இது பெரிதும் துரிதப்படுத்தியுள்ளது. சர்வதேசரீதியாக பாசிசத்தின் வளர்ச்சி ஆளும் உயரடுக்கின் படுகொலை அரசியலுடன் நேரடியாக இணைந்துள்ளது. ஜனவரி 6 ஆம் தேதி வாஷிங்டனில் நடந்த கிளர்ச்சி என்பது ட்ரம்ப் மற்றும் அவரது இணை சதிகாரர்களின் தீங்கு விளைவிக்கும் தயாரிப்பு அல்ல. மாறாக வர்க்க ஆட்சியின் யதார்த்தமாகும்.
ஆளும் வர்க்கம், மேலும், உள்நாட்டில் ஒரு பாரிய சமூக நெருக்கடியையும் தொழிலாள வர்க்கத்தில் வளர்ந்து வரும் கோபத்தை எதிர்கொண்டு அதனை இராணுவ மோதலை நோக்கி மிகவும் வெளிப்படையாகத் திருப்ப முனைகிறது. பதவியேற்ற முதல் இரண்டு மாதங்களில், பைடென் நிர்வாகம் மத்திய கிழக்கு, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான அதன் ஆக்கிரோஷமான ஆத்திரமூட்டல்களை தீவிரப்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்துள்ளது.
முதலாளித்துவ சமுதாயத்தின் அனைத்து உத்தியோகபூர்வ அமைப்புகளும் அம்பலப்படுத்தப்படுகின்றன. தீவிர வலதுசாரி அல்லது "இடது" என்று கூறப்படும் அரசாங்கங்களாக இருந்தாலும், ஒரே அடிப்படைக் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. அமெரிக்காவில், பேரழிவிற்கான மூலகாரணங்கள் குறித்தை அதற்கு பொறுப்பானவர்கள் குறித்தோ ஒரு காங்கிரஸின் விசாரணையோ அல்லது தீவிரமான ஊடக விசாரணையோ கூட இல்லை. பெருநிறுவன ஆதரவு தொழிற்சங்கங்கள், உண்மையில் நிர்வாகத்தின் கருவிகளாக இயங்கி எதிர்ப்பை அடக்குவதற்கும், ஆட்சியின் கொள்கையை அமல்படுத்துவதற்கும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளன.
முதலாம் உலகப் போரைப் போலவே, தொற்றுநோயும் ஒரு முழு தலைமுறை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஆழ்ந்த சமூக மற்றும் அரசியல் தீவிரமயமாக்கலை உருவாக்குகிறது. பைடென் "இயல்பு நிலைக்கு" திரும்புவதாக அறிவித்தாலும், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளுக்கு கல்வியாளர்களிடையே பெருகிவரும் எதிர்ப்பு உள்ளது. மேலும் ஆளும் வர்க்கம் வலியுறுத்தும் கொலைகார கொள்கையை தொடர வேண்டும் என்பதற்கு முழு தொழிலாள வர்க்கத்திலும் எதிர்ப்பு காணப்படுகின்றது.
தொற்றுநோயை எவ்வளவிற்கு பேரழிவுகரமானதாக இருக்கின்றதோ அந்தளவிற்கு, இது மேலும் மேலும் ஆழமான நெருக்கடிகளான காலநிலை மாற்றம், இன்னும் மோசமான மற்றும் ஆபத்தான தொற்றுநோய்கள், அணுசக்தி யுத்த அச்சுறுத்தல் ஆகியவற்றை முன்னறிவிக்கின்றது. இவையும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தத் தவறிய அதே அடிப்படை காரணங்களிலிருந்து உருவாகின்றன.
இந்த தொற்றுநோய் முதலாளித்துவ தேசிய அரசு முறையை ஒழிப்பதன் அவசியத்தை நிரூபித்துள்ளது. சமுதாயத்தின் மிக முக்கியமான நலன்களைப் பாதுகாப்பது என்பது நிதிய தன்னலக்குழுவிடமிருந்து சொத்துக்கை பறிமுதல் செய்வதிலிருந்து பிரிக்க முடியாததும் மற்றும் உற்பத்தி சாதனங்களில் தனியார் சொத்துடமையை முடிவுக்குக் கொண்டுவருவதிலிருந்து பிரிக்கமுடியாததாகும். இது விஞ்ஞான ரீதியாக நிர்வகிக்கப்படும், பகுத்தறிவுடன் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஜனநாயக ரீதியாக கட்டுப்படுத்தப்படும் உலகப் பொருளாதாரத்தின் அவசரத்தேவையை தெளிவுபடுத்துகிறது.
சோசலிசத்திற்கான போராட்டம் என்பது தன்னலக்குழுக்களின் செல்வத்தினை விட மனித தேவைகளுக்கும், இலாபத்தை விட வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு சமூகத்திற்கானதும், தேசிய மோதலுக்கு எதிராக சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு உலகளாவிய போராட்டமாகும்.
மேலும் படிக்க
- கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஓர் ஒருங்கிணைந்த உலகளாவிய அவசரகால நடவடிக்கைக்காக!
- அமெரிக்க ஏகாதிபத்தியம் கொரொனாவைரஸை போருக்கான ஆயுதமாக்குகின்றது
- மொடர்னாவின் கொரொனா வைரஸ் தடுப்பூசி மோசடி
- அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய மாநாடு கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் மீது தீர்மானம் நிறைவேற்றுகிறது