மினசோட்டா பொது வேலைநிறுத்தமும் அமெரிக்காவில் வர்க்கப் போராட்டத்தின் மறு எழுச்சியும்
அரசியல் வீழ்ச்சியின் அளவும், வர்க்க பதட்டங்களின் தீவிரமும் நனவில் ஆழமான மாற்றங்களை உருவாக்கும் கட்டத்தை அமெரிக்கா எட்டியுள்ளது.
அரசியல் வீழ்ச்சியின் அளவும், வர்க்க பதட்டங்களின் தீவிரமும் நனவில் ஆழமான மாற்றங்களை உருவாக்கும் கட்டத்தை அமெரிக்கா எட்டியுள்ளது.
ஈரான் மீது ஒரு பாரிய இராணுவத் தாக்குதலைத் தொடுப்பதற்கான வாஷிங்டனின் தயாரிப்புகளுக்கும், அந்நாட்டின் 9.3 கோடி (93 மில்லியன்) மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான அக்கறை என்று கூறப்படுவதற்கும் இடையே எந்த சம்பந்தமும் கிடையாது.
கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து விடுத்து வரும் மிரட்டல்கள், ஐரோப்பாவில் கடும் அதிருப்தியையும் எதிர்வினைகளையும் தூண்டியுள்ளது.
ட்ரம்ப்பின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையின் (ICE) வெறியாட்டத்தை எதிர்ப்பதற்காக, ஜனவரி 23 வெள்ளிக்கிழமை அன்று ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் மற்றும் பொருளாதார முடக்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பானது, ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக நகரம், மாநிலம் மற்றும் நாடு முழுவதும் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பரந்த அணிதிரட்டலின் தொடக்கமாக மாற வேண்டும்.
கிரீன்லாந்தைக் கையகப்படுத்த வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையை டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து செவ்வாய்க்கிழமை நிராகரித்தன. துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோருடன் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இந்த நிராகரிப்பு வெளியானது. அதே நேரத்தில், ஐரோப்பிய நேட்டோ (NATO) உறுப்பு நாடுகள் அந்த ஆர்க்டிக் தீவிற்குத் தங்கள் படைகளை அனுப்பி வருகின்றன.
ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர், இராணுவத்தை மீள் ஆயுதபாணியாக்குதல் மற்றும் மூன்றாம் உலகப் போருக்கான தயாரிப்பின் நேரடி விளைவாக, கட்டாய இராணுவச் சேவை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு, விரிவாக்கப்பட்டு வருகிறது.
ஈரான் மீது உடனடியாக இராணுவத் தாக்குதலைத் தொடுப்பதுக்கு ட்ரம்ப் நிர்வாகம் தயாராகி வருகிறது. 93 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்த மத்திய கிழக்கு நாட்டை மீண்டும் நவ-காலனித்துவ அடிமைத்தனத்திற்குள் தள்ளுவதையும், அதன் பரந்த எண்ணெய் வளங்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையின் அடுத்த கட்டம் இதுவாகும்.
வெனிசுவேலா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்பட்ட ஒன்பது நாட்களுக்குப் பிறகு, ஈரான் முழுவதும் வெடித்துள்ள மக்கள் போராட்டங்களை ஒரு சாக்குப்போக்காக வைத்துக்கொண்டு, அந்த நாடு மீது தாக்குதல் நடத்தப்போவதாக ட்ரம்ப் நிர்வாகம் பகிரங்கமாக அச்சுறுத்தி வருகிறது.
ஈரானிய தொழிலாள வர்க்கத்தால் ஏகாதிபத்திய அடிமைத்தனத்தையோ அல்லது இஸ்லாமிய குடியரசின் பொருளாதாரப் பற்றாக்குறை மற்றும் அரசியல் ஒடுக்குமுறையையோ பொறுத்துக்கொள்ள முடியாது. ஏகாதிபத்தியத்திற்கும், இஸ்லாமிய குடியரசின் அனைத்து நிறுவனங்களுக்கும் மற்றும் ஈரானிய முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவினருக்கும் எதிராக, ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அது தலையிட வேண்டும்.
அமெரிக்காவில் ரெனீ நிக்கோல் குட் கொடூரமாகக் கொல்லப்பட்டதும், வெனிசுவேலா மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் படையெடுப்பும், உள்நாட்டில் சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதல் மற்றும் வெளிநாட்டில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பில் ஒரு பண்பு ரீதியான தீவிரமடைதலை குறிக்கின்றன.
பெருகி வரும் சமூக ஆத்திரத்திற்கு மத்தியில், ட்ரம்ப் நிர்வாகம் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) கொலையாளிகளுக்கான தனது பாதுகாப்பை இரட்டிப்பாக்கியுள்ளது. ரெனீ நிக்கோல் குட்டின் கொலையாளிக்கு "முழுமையான சட்ட விலக்கு பாதுகாப்பு" இருப்பதாக துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் அறிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை, வெனிசுவேலா மீதான அமெரிக்கத் தாக்குதல் மற்றும் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகம் உலகளாவிய கொள்ளை நடவடிக்கையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ரஷ்ய கடற்படையுடனான மோதலுக்கு மத்தியில், நடுக்கடலில் ரஷ்யக் கொடியுடன் பயணித்த எண்ணெய்க் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. அத்துடன் பில்லியன் கணக்கிலான டாலர் மதிப்புள்ள வெனிசுவேலாவின் எண்ணெயைச் சூறையாடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளதுடன், கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதற்காக நேட்டோ (NATO) நட்பு நாடான டென்மார்க் மீது இராணுவத் தாக்குதலை நடத்துவதே ஒரு "விருப்பத் தேர்வாக" இருப்பதாக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஒரு பேரழிவு தரும் போரின் தீவிரத்தைத் தடுத்து நிறுத்துவதற்கும், முதலாளித்துவ தன்னலக்குழுவின் பிரதிநிதிகளிடமிருந்து அதிகாரத்தைப் பறிப்பதற்கும், கிளர்ந்தெழுந்து போராடுவதற்கான பொறுப்பு தொழிலாள வர்க்கத்தின் மீது விழுகிறது.
கடந்த திங்கட்கிழமை அன்று NBC செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்கேஸ் அமெரிக்க அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தவறினால், வெனிசுவேலா மீது அமெரிக்கா இரண்டாவது முறையாக இராணுவ ஊடுருவலை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.
ஜனநாயக நிறுவனங்களை வன்முறை மூலம் வீழ்த்தும் முறைகள், இப்போது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சர்வாதிகாரத்திற்காகவும், உலகை ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு உட்படுத்துவதற்காகவும் முன்னெப்போதும் இல்லாத வகையில் பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த வாரத்தில் ஈரானின் பல பகுதிகளில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பெரிய போராட்டங்கள் நடந்துள்ளதுடன் அதிகரித்து வரும் அரச அடக்குமுறைக்கு மத்தியிலும் அவை தொடர்கின்றன.
ஒரு தரம் தாழ்ந்த போலி சட்ட நாடகத்தில், கடத்தப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை, ட்ரம்ப் நிர்வாகம் திங்கட்கிழமை அன்று மன்ஹாட்டனில் உள்ள மத்திய கூட்டாட்சி நீதிமன்றத்தில் (federal court) வலுக்கட்டாயமாக ஆஜர்படுத்தியது.
அமெரிக்கா, வெனிசுவேலா மீது சட்டவிரோத இராணுவத் தாக்குதலை நடத்தி, அதன் ஜனாதிபதியை கடத்திய அடுத்த நாள், ட்ரம்ப் நிர்வாகம் உலக நாடுகளுக்கு எதிராகத் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை விடுத்து வருகிறது.
உலக சோசலிச வலைத் தளம் (WSWS), அமெரிக்காவிலுள்ள சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஆகியவை, வெனிசுவேலா மீதான ஆக்கிரமிப்பையும், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ குற்றவியல் ரீதியாக கடத்தப்பட்டதையும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டனம் செய்கின்றன.
வாஷிங்டனின் நோக்கங்கள் வெனிசுவேலாவோடு மட்டும் நின்றுவிடப் போவதில்லை. அவை, ஒட்டுமொத்த இலத்தீன் அமெரிக்காவையும் மீண்டும் காலனியாக்கும் முயற்சியாகவும், இப்பிராந்தியத்தை அமெரிக்க இலாப நலன்களுக்கும் உலகப் போருக்கான தயாரிப்புகளுக்கும் அடிபணிய வைக்கும் ஒரு உந்துதலாகவும் அமைந்துள்ளன.
டிசம்பர் 24 அன்று வெனிசுவேலாவிற்குள் சி.ஐ.ஏ (CIA) ஒரு ட்ரோன் தாக்குதலை நடத்தியது என்பதை சி.என்.என் (CNN) செவ்வாயன்று உறுதிப்படுத்தியுள்ளது. இது, கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க இராணுவக் குவிப்பு தொடங்கியதில் இருந்து அந்நாட்டின் மீது நடத்தப்பட்ட முதல் விமானத் தாக்குதலாகும்.
வாஷிங்டனின் நோக்கங்கள் வெனிசுவேலாவோடு மட்டும் நின்றுவிடப் போவதில்லை. அவை, ஒட்டுமொத்த இலத்தீன் அமெரிக்காவையும் மீண்டும் காலனியாக்கும் முயற்சியாகவும், இப்பிராந்தியத்தை அமெரிக்க இலாப நலன்களுக்கும் உலகப் போருக்கான தயாரிப்புகளுக்கும் அடிபணிய வைக்கும் ஒரு உந்துதலாகவும் அமைந்துள்ளன.
ஈரானை "மிகக் கடுமையாகத் தாக்குவேன்" என்று அச்சுறுத்திய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காஸா "அதற்கான கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்றும் எச்சரித்தார். அதே வேளையில், பாலஸ்தீன மக்களை இனரீதியாக சுத்திகரிக்கும் தனது கோரிக்கைகளை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
ட்ரம்ப் நிர்வாகம், இரு கட்சிகளின் (குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி) உடந்தையோடு பாரிய தடுப்புக்காவல், ஆட்கடத்தல் மற்றும் நாடு கடத்துவதற்கான ஒரு உள்நாட்டு சித்திரவதை முகாம் முறையை உருவாக்கி வருகிறது. புலம்பெயர்ந்தோர் மீதான இந்தத் தாக்குதல், ஒரு பரந்த சர்வாதிகாரப் போக்கின் முன்னணியில் உள்ளது. இது தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நடவடிக்கையால் எதிர்க்கப்பட வேண்டும்.
ஜூன் 13-15, 2025 அன்று, துருக்கியில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலத்தின் ஸ்தாபக காங்கிரஸில், பின்வரும் கொள்கை அறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
உக்ரேன் போரில் ஐரோப்பிய ஒன்றியம் இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்வது, இது நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஒரு மறைமுகப் போர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
குறைந்த ஊதியம் பெறும் தமிழ் பேசும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் நுவரெலியா மாவட்டம், சூறாவளியால் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் கல் சரிவுகளால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாகும்.
ஜாகோபின் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒரு கல்விசார்ந்த ஆய்வு அல்ல. இது அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) மற்றும் ஜாகோபின் (Jacobin) இதழுடன் தொடர்புடைய சலுகை பெற்ற குட்டி-முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு அரசியல் அறிக்கையாகும். இது, ஒரு பாசிச நிர்வாகத்துடனான அவர்களின் பகிரங்கமான ஒத்துழைப்பை நியாயப்படுத்துவதுடன், முதலாளித்துவ அரசு இயந்திரத்தை பாதுகாக்கிறது.
உலகளாவிய போர், சர்வாதிகாரம் மற்றும் சமூக எதிர்ப்-புரட்சி அதிகரித்து வரும் நிலையில், எங்கள் வாசகர்கள் அனைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) புத்தாண்டு நிதிக்கு நன்கொடை அளிக்குமாறும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தை உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியாக்கும் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கிறோம்.
வெனிசுவேலா அரசாங்கத்தைக் கவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்டு வாஷிங்டன் கடற்படை முற்றுகையைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று வெனிசுலா கடல் பகுதிக்கு அப்பால் சீனாவை நோக்கிச் சென்ற எண்ணெய்க் கப்பலை அமெரிக்க கடலோர காவல்படை கைப்பற்றியது. கடந்த இரண்டு வாரங்களில் நடைபெறும் இரண்டாவது கப்பல் கைப்பற்றல் இதுவாகும்.
1985 டிசம்பரில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) இடைநீக்கம் செய்யப்பட்டதானது, பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், ட்ரொட்ஸ்கிசத்திற்கு கிடைத்த ஒரு தீர்க்கமான வெற்றியாக அமைந்ததுடன், நான்காம் அகிலத்தை கட்டியெழுப்புவதில் ஒரு புதிய கட்டத்தையும் திறந்து வைத்தது.
சமூக ஜனநாயகவாதிகள் தொடங்கி பாசிசக் கட்சிகள் வரை அனைவரும், 2026 வசந்த காலத்திற்குள் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இரண்டாம் உலகப் போரின் போது நாஜிக்கள் புரிந்த பயங்கரமான மானுடத்திற்கு எதிரான குற்றங்களைத் தொடர்ந்து, ஐரோப்பிய மனித உரிமைகள் சாசனத்தில் (ECHR) அறிவிக்கப்பட்ட "அனைவருக்குமான பொதுவான கோட்பாடுகளுக்கான" (Universalist principles) அர்ப்பணிப்பை இந்த உடன்பாடு முடிவுக்குக் கொண்டுவரும்.
தொழிலாளர் வர்க்கம், தங்கள் உயிரையும் தொழில்முறை கண்ணியத்தையும் பாதுகாத்துக்கொண்டு வேலை செய்ய வேண்டுமானால், அதற்கான சூழ்நிலைகளை உருவாக்க தங்களின் தலைமையில் ஒரு போராட்டத்தைத் தொடங்க வேண்டும்.
மவுசாக்கலை தேயிலை தொழிற்சாலையிலும் யட்டியந்தொட்ட கிரிபோருவ இறப்பர் தொழிற்சாலையிலும் தோட்டத் தொழிலாளர்களின் மரணம் சம்பந்தமாக டிசம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏனையோரையும் நாங்கள் அழைக்கிறோம்.
டிட்வா சூறாவளி பேரழிவு ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் திவால்நிலையையும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பையும் முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் எதிரான போருக்கு ஆதார வளமாக இருக்கும் இலத்தீன் அமெரிக்காவில் மேலாதிக்கம் செலுத்துவதற்கான தாக்குதலின் பாகமாக, ட்ரம்ப் நிர்வாகம் வெனிசுலாவின் எண்ணெய் இருப்புக்களைக் கொள்ளையடிக்க முயல்கிறது.
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவானது, உலகளாவிய முதலாளித்துவத்தால் உந்தப்படும் காலநிலை மாற்றத்தின் தீவிரம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளால் விஞ்ஞானம், பேரிடர் தடுப்பு முறைமையில் காணப்படும் வளர்ச்சியின்மை ஆகிய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இரண்டு செயல்முறைகளின் விளைவாகும்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கரீபியன் பகுதியில் உள்ள வெனிசுவேலா நாட்டின் மீது, அமெரிக்கா "மிக விரைவில்" தரைவழித் தாக்குதல்களைத் தொடங்கும் என்று கூறியுள்ளார். இது, வெனிசுவேலா மீது அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலை நடத்துவதற்கான சாத்தியத்தை அதிகரித்துள்ளது.
இரண்டு தொழிலாள வர்க்க தோழர்களான ஆர்.எம். குணதிலகே (87), லீலா பாலசூரியா (79) ஆகியோரின் மரணத்தை சோசலிச சமத்துவக் கட்சி துக்கத்துடன் அறிவிக்கிறது. வரும் நாட்களில் அவர்களைப் பற்றிய புகழஞ்சலி கட்டுரைகளை வெளியிடுவோம்.
முதலாளித்துவ இலாபங்களுக்காக மனித உயிர்களை அடிபணியச் செய்யும் கொடூரமான கொள்கையின் விளைவே இந்த இரண்டு தொழிலாளர்களின் மரணமும் சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவும் ஆகும். பேரழிவின் சூழலில் இந்தக் கூட்டம் இன்னும் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
டிசம்பர் 12 அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் கல்வி மற்றும் அணிதிரட்டலுக்காக மேம்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு புரட்சிகரமான பயன்பாடான சோசலிசம் AI-ஐ தொடங்கி வைக்கிறது.
கடந்த புதன்கிழமை, அமெரிக்க இராணுவம் வெனிசுவேலாவின் கடல் பகுதியில் வைத்து ஒரு பெரிய எண்ணெய்க் கப்பலைக் கைப்பற்றியுள்ளது. இது, தென் அமெரிக்க நாட்டிற்கு எதிரான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் போர் தயாரிப்புகளில், ஒரு பெரிய அதிகரிப்பைக் குறிக்கும் ஒரு வெட்கமற்ற கடற்கொள்ளையர் நடவடிக்கையாகும்.
சர்வதேச அளவில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அறிவாளிகளிடையே சோசலிச நனவை மேம்படுத்துவதற்காக, மார்க்சியத்தின் விஞ்ஞானக் கண்ணோட்டத்தை கொண்டு சேர்க்கும் வகையில், உலக சோசலிச வலைத் தளத்தால் (WSWS) உருவாக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த புதிய உரையாடு செயலி (chatbot) தான் சோசலிசம் AI (செயற்கை நுண்ணறிவு) ஆகும்.
கம்பளை நகரத்தில் வெள்ள நீர் வற்றிப் போயிருந்தாலும், ஜே.வி.பி./தே.ம.ச.அரசாங்கம் அத்தகைய பேரழிவு தரும் வெள்ளம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கத் தவறியதால், அதற்குத் தயாராக இல்லாத சூழ்நிலையிலேயே இந்த அழிவு ஏற்பட்டது.
அமெரிக்கா அதன் நேட்டோ கூட்டாளிகளின் உள்விவகாரங்களில் தலையிடவும், ஐரோப்பிய ஒன்றியத்தை உடைக்கவும், பாசிசக் கட்சிகளை வலுப்படுத்தவும், இனவெறி மறுகுடியேற்றக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த உதவவும் நோக்கம் கொண்டுள்ளது.
இந்த திரைப்படம், 1945-46 ஆம் ஆண்டுகளில் நடந்த நூரெம்பேர்க் விசாரணைகள் பற்றிய ஒரு துல்லியமான விளக்கத்தை தருகிறது. ஆனால், இது நாஜிக்கள் மேற்கொண்ட குற்றங்களின் காரணத்தை அவர்களின் தனிப்பட்ட உளவியலில் தேடுகிறது.
மலையகப் பகுதியில் அமைந்துள்ள 724,957 மக்கள் தொகையைக் கொண்ட நுவரெலியா மாவட்டம், கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் கல் சரிவுகளால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாகும்.
ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் மூன்றாவது தடவையாக, அமைச்சரவை அதிகாரிகள் மற்றும் சக குடியரசுக் கட்சியினர் சூழ்ந்து நிற்கும்போது ட்ரம்ப், சோமாலியாவைச் சேர்ந்த அனைத்து மக்களையும் "குப்பைகள்" என்று கண்டனம் செய்தார்.
உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள், காலநிலை மாற்றத்திற்கும், தற்போது வழக்கமாக நிகழும் தீவிர வானிலை நிகழ்வுகளுக்கும் பங்களிக்கும் பிற வகையான சுற்றுச்சூழல் சீரழிவை எதிர்த்துப் போராடுவதற்கு எந்த தீவிரமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
2004 சுனாமியை நினைவூட்டும் வகையிலான இதயத்தை பிழியும் காட்சிகள் இப்போது இலங்கை முழுவதும் வெளிவருகின்றன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள் முன்னர் துண்டிக்கப்பட்டிருந்த பகுதிகளுக்குள் பிரவேசிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தொடர்ந்து வெளிவருகின்றன.
கரீபியன் பகுதியில் ட்ரம்ப் நிர்வாகத்தின் தொடர் படுகொலைகள் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பல தசாப்த கால படுகொலைகள், சித்திரவதைகள் மற்றும் ஆக்கிரமிப்புப் போரின் தொடர்ச்சியாகும். இவை அனைத்தும், 1945 ஆம் ஆண்டு நூரெம்பேர்க் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட முன்னுதாரணத்தின் கீழ் சட்டவிரோதமானவை.
இலங்கை ஜனாதிபதியின் அவசரகால நிலை பிரகடனம் உயிர்களைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக சாத்தியமான சமூக அமைதியின்மையை அடக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
பாதுகாப்பற்ற நிலையில் உயிர் பிழைத்தவர்களை கடலில் வைத்து படுகொலை செய்வதற்கான உத்தரவு, வாஷிங்டனின் முற்றிலும் குற்றவியல் மற்றும் கொள்ளையடிக்கும் போர் நோக்கங்களை முன்னெடுப்பதற்கான ஒரு அப்பட்டமான போர்க்குற்ற நடவடிக்கையாகும்.
எல்லி 1975 இல் தனது 19 வயதில், சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei) முன்னோடி அமைப்பான சோசலிச தொழிலாளர் கழகத்தில் (Bund Sozialistischer Arbeiter) சேர்ந்து, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முன்னோக்கிற்காக 50 ஆண்டுகளாக அயராது போராடினார்.
மேற்குக் கரையில் இரண்டு பாலஸ்தீனியர்களுக்கு விசாரணையற்ற உடனடி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது, இஸ்ரேலால் கையெழுத்திடப்பட்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் புனிதப்படுத்தப்பட்ட "சமாதான" ஒப்பந்தம் பாலஸ்தீனம் முழுவதும் இனப்படுகொலைக்கு வழிவகுக்கும் ஒரு செயலைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.
அகதிகளின் நிரந்தர வதிவிட அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டு வருவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து தொழிற் கட்சி தலைமைக்கு எதிராக ஒரு "கிளர்ச்சி" பற்றிய பேச்சுக்கள் இருந்தாலும், கட்சியின் இரண்டு டசினுக்கும் குறைவான பாராளுமன்ற உறுப்பினர்கள், இதற்கு எந்தவிதமான எதிர்ப்பையும் பதிவு செய்வது பற்றி கவலைப்படவில்லை.
நிலச்சரிவுகள் உட்பட இயற்கை பேரழிவுகள் முற்றிலும் இயற்கை நிகழ்வுகள் அல்ல, மாறாக, இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பினால் உருவாக்கப்படும் பேரழிவுகள்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியானது, அமெரிக்க சமூகத்தை மட்டுமல்ல, ஐரோப்பிய சமூகத்தையும் ஒரு புரட்சிகர மோதலை நோக்கித் தள்ளுகிறது.
சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் (SWP) உயர் மட்டத்தில் இருந்த FBI மற்றும் சோவியத் இரகசிய போலீஸ் முகவர்களை அம்பலப்படுத்தி, அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஆலன் கெல்ஃபாண்ட், கடந்த அக்டோபர் 29ம் திகதி, புதன்கிழமை அன்று லொஸ் ஏஞ்சல்ஸில் காலமானார். அவருக்கு வயது 76.
ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையே ஒரு உடன்பாடு எட்டப்பட்டால் குறிப்பாக, ஐரோப்பிய சக்திகள் தங்கள் மறு ஆயுதபாணியாக்கல் மற்றும் போர் முயற்சிகளை இரட்டிப்பாக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளன.
மம்தானியின் வருகையின் உடனடி அரசியல் விளைவு, அவரை பதவிக்கு கொண்டு வந்த மக்களை குழப்புவதாகவும் திசைதிருப்புவதாகவும் இருக்கிறது.
இந்த புரட்சிகர கருவி சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள் சோசலிச நனவை வளர்ப்பதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும்.
பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் பில்லியன் கணக்கான இலாபத்தை ஈட்டுகின்ற அதேவேளை, தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து வறுமை, வேலையின்மை விகிதம் அதிகரிப்பு மற்றும் பரவலான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்கின்றனர்
ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மரணதண்டனை வழங்க ட்ரம்ப் அழைப்பு விடுத்த ஒரு நாள் கழித்து, வெள்ளை மாளிகைக்கான மம்தானியின் பயணம், நெருக்கடி நிறைந்த ட்ரம்ப் ஆட்சியின் அரசியல் சட்டபூர்வத்தன்மையை வலுப்படுத்த உதவியுள்ளது.
ஊழல் பிடித்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தினால் அல்ல. மாறாக, தொழிலாளர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு விசாரணை, தொழிலாளர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான அறிவைக் கொண்டு ஆயுதபாணியாவதற்கும், பணியிடங்களில் இந்த மரணங்களைத் தவிர்க்க முடியாததாக மாற்றும் பெருநிறுவன சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகத் தாக்குதலைத் தொடங்குவதற்கும் அவசியமாகும்.
சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் இந்த இனவாத ஆத்திரமூட்டலை நிராகரிக்குமாறு வலியுறுத்துகிறது. தொழிலாள வர்க்கம் சர்வதேசிய வர்க்க ஐக்கியத்துக்காகப் போராட வேண்டும்.
சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் வருகை, அவரது நினைவாக நடத்தப்பட்ட ஒரு ஆடம்பரமான இரவு விருந்துடன் நிறைவடைந்தது. இதில், டசின் கணக்கான வோல் ஸ்ட்ரீட் நிர்வாகிகள் மற்றும் பல பில்லியனர்கள் கலந்து கொண்டனர்.
இலாபத்திற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை குறைப்பதனால் ஏற்படும் இந்த மரணங்கள், சாதாரணமான "தொழில்துறை விபத்துக்கள்" அல்ல, மாறாக, முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட கொலைகள் என்று WSWS நிருபர்கள் தொழிலாளர்களுக்கு விளக்கினர்.
புதிய தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்ட உபரியைப் பயன்படுத்தி, மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைப்பதற்காக அல்ல, மாறாக மேம்படுத்துவதற்காக, தொழிலாளர்களின் அதிகாரத்திற்காகவும், உற்பத்தியை தொழிலாளர்கள் கட்டுப்படுத்துவதற்காகவும் தொழிலாளர்கள் போராட வேண்டும்.
நவம்பர் 30 நடக்கவிருந்த இந்தக் கூட்டம் காலநிலை பாதிப்பு காரணமாக புதிய திகதி அறிவிக்கப்படும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி திசாநாயக ஏழைகள் சம்பந்தமாக அலட்சியத்தை வெளிப்படுத்தியதோடு தங்களின் சமூக உரிமைகளுக்காக போராடும் தொழிலாளர்களை அச்சுறுத்திய அதேநேரம், வணிக சார்பு சிக்கன நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டினார்.
ட்ரம்ப் நிர்வாகம், திங்களன்று 83 பேரை உக்ரேனுக்கு நாடு கடத்த திட்டமிட்டுள்ளது. பல ஆண்டுகளில் இதுவே முதல் பாரிய நாடு கடத்தல் நடவடிக்கை ஆகும். உக்ரேனியர்கள் அங்கு உடனடியாக கட்டாய இராணுவ சேவை மற்றும் போர்முனைக்கு அனுப்பப்படுவதை எதிர்கொள்கின்றனர்.
கடந்த வார இறுதியில், தென் அமெரிக்கக் கடற் பகுதியில் ட்ரம்ப் நிர்வாகத்தின் குற்றவியல் இராணுவம் மேற்கொண்ட இரண்டு ஏவுகணைத் தாக்குதல்களில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைந்தது 76 ஆக கொண்டு வந்துள்ளது.
அமரசூரியவின் கருத்துக்கள், அரசாங்கம் இனவாத அரசியலை எதிர்ப்பதாகவும், தமிழர்கள் உட்பட சிறுபான்மையினருடன் "சமரசத்தை" விரும்புவதாகவும், போரின் "காயங்களை குணப்படுத்துவதாகவும்" கூறுகின்ற பொய்களை அம்பலப்படுத்துகின்றன.
ட்ரம்பின் பிரகடனத்தில் உள்ள அனைத்து பொய்களுக்கும், வரலாற்றுப் பொய்மைப்படுத்தல்களுக்கும் பின்னால், முதலாளித்துவத்திற்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பால் பீதியடைந்துள்ள ஆளும் வர்க்கத்தின் அச்சங்களே உள்ளன.
“நாம் துன்பப்பட்டாலும், காயமடைந்தாலும், அல்லது இயந்திரத்தில் சிக்கி விஜயகுமார் போல மரணித்தாலும், அது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. அவர்கள் பணம் சம்பாதிக்க நாம் சாக வேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றனர்.”
ஜூன் 13-15, 2025 அன்று, துருக்கியில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலத்தின் ஸ்தாபக காங்கிரஸில், பின்வரும் கொள்கை அறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
எலோன் மஸ்க்கிற்கு ஊதியப் பொதியை வழங்குவது என்பது, பணிநீக்கங்கள், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சமூக வேலைத் திட்டங்களை அழிப்பதன் மூலம், ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தை பெருமளவில் வறுமையில் தள்ளும் நோக்கத்தின் பிரகடனமாக உள்ளது.
மம்தானியின் தேர்தல், ட்ரம்பிற்கு அதிகரித்து வரும் சமூக கோபத்தையும், எதிர்ப்புகளையும், மம்தானியின் வேலைத் திட்டத்தால் தீர்க்க முடியாத அபிலாஷைகளையும் பிரதிபலிக்கிறது.
புஷ்-செனி நிர்வாகத்தின் அரியணைக்குப் பின்னால் ஒரு சக்தியாக இருந்த துணை ஜனாதிபதி, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்த போர்கள், CIA ஆல் நடத்தப்பட்ட ஆட்கடத்தல்கள், சித்திரவதைச் செயல்கள் மற்றும் அமெரிக்க மக்கள் மீதான பெருமளவிலான சட்டவிரோத கண்காணிப்புகள், ஆகியவற்றிற்குப் பொறுப்பானவர்.
வெள்ளை மாளிகையில் அதிகாரத்தை வைத்திருக்கும் ஒரு ஒட்டுண்ணி தன்னலக்குழுவின் அமெரிக்காவின் மேலாதிக்கம், அனைவரும் காணக்கூடிய வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிய நாடோடி என்ற கதாபாத்திரத்தை உருவாக்குவதன் மூலம், சாப்ளின் உத்தியோகபூர்வ முதலாளித்துவ சமூகத்தால் இழிவுபடுத்தப்பட்ட ஒரு சமூக வகையை — ஒரு நாடோடி, வேலையில்லாத மனிதன், சொத்து இல்லாத மனிதன் — எடுத்துக்கொண்டு, அவரை உலகின் மிகவும் பிரியமான கதாபாத்திரமாக மாற்றினார்.
ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்கு சற்று முன்பு, ட்ரம்ப் அணு ஆயுத அச்சுறுத்தலை முன்வைத்திருப்பது, சீனாவுக்கு எதிரான ஒட்டுமொத்த போருக்கு அமெரிக்கா தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது என்பதற்கான கூர்மையான எச்சரிக்கையாகும்.
வளிமண்டலத்தில் கொடிய கதிர்வீச்சைப் பரப்புவதற்கும், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதற்கும் அப்பால், அணு ஆயுத சோதனை என்பது, தவறான கணக்கீடுகள் மூலமாகவோ அல்லது வேண்டுமென்றே தூண்டுதல் மூலமாகவோ, அணு ஆயுதப் போரின் சாத்தியத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் அதிகரிக்கும் ஒரு செயலாக உலகளவில் புரிந்து கொள்ளப்படுகிறது.
நெருங்கி வந்த தனது மரணத்தை அமைதியாகவும் கண்ணியத்துடனும் ஏற்றுக்கொண்ட ஆலன், சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு 50 ஆண்டுகளை அர்ப்பணித்த, தனது வாழ்க்கைப் பாதையில் திருப்தியை வெளிப்படுத்தினார்.
மம்தானியின் பிரச்சாரத்திற்கான ஆதரவு என்பது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே இடது நோக்கிய நகர்வைப் பிரதிபலிக்கிறது. ஆனால், மம்தானியின் வேலைத்திட்டமானது, தன்னலக்குழு மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னோக்கிய பாதையை பிரதிநிதித்துவம் செய்யவில்லை.
தமிழ்-பேசும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் திசாநாயக அரசாங்கம் அமுல்படுத்தும் ஐ.எம்.எப் ஆல் கட்டளையிடப்பட்ட சமூகத் தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுவதன் மூலமே போதுமான சம்பளம் வாழத்தகுந்த வீடு, முறையான கல்வி, சுகாதாரம் மற்று ஏனைய சமூக உரிமைகளை வென்றெடுக்க முடியும்
இலத்தீன் அமெரிக்க கடற்பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக, அமெரிக்க இராணுவம் மேற்கொண்டுவரும் காட்டுமிராண்டித்தனமான படுகொலைத் தாக்குதலாக, கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கொடிய தாக்குதல் இருக்கிறது.
1962 கியூப ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர் கரீபியன் கடலில் பிரமாண்டமான கடற்படையை அணிதிரட்டி வரும் ட்ரம்ப் நிர்வாகம், வெனிசுவேலாவுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய மற்றும் சட்டவிரோத போரை வெளிப்படையாக தயாரித்து வருகிறது.
ஜனநாயகக் கட்சியினரின் கோழைத்தனத்தாலும் உடந்தையாலும் சாத்தியமாக்கப்பட்ட, ஜனவரி 6, 2021 அன்று தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பின் இலக்குகளை ட்ரம்ப் செயல்படுத்தி வருகிறார்.
ரஷ்யாவுக்கு எதிராக தீவிரமடைந்து வரும் அமெரிக்க-நேட்டோ போருக்கு மத்தியில், ஐரோப்பிய கவுன்சில் பாதுகாப்பு தயார்நிலை திட்ட வரைபடம் 2030 ஐ ஏற்றுக்கொண்டதானது, சர்வாதிகாரம் மற்றும் உலகளாவிய போருக்கான அடித்தளத்தை அமைத்து, முழுமையாக இராணுவமயமாக்கப்பட்ட ஐரோப்பாவை நோக்கிய ஒரு தீர்க்கமான திருப்பத்தைக் குறிக்கிறது.
அக்டோபர் 18 அன்று, 7 மில்லியன் அமெரிக்க இளைஞர்கள், தொழிலாளர்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் இணைந்து, நாடு தழுவிய அளவில் மேற்கொண்ட "மன்னர்கள் வேண்டாம்" போராட்டத்தை ஐரோப்பா முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் மில்லியன் கணக்கானவர்கள் பார்த்தனர்.
இந்த "சமாதான" உடன்படிக்கை, காஸாவின் பெரும் பகுதியை நிரந்தரமாக இஸ்ரேல் ஆக்கிரமித்து இணைத்துக் கொள்வதையும், தினசரி படுகொலைகள் மற்றும் மக்களை வேண்டுமென்றே பஞ்சத்துக்குள் தள்ளுவதையும் புனிதப்படுத்தியுள்ளது.
பெருந்தோட்ட தொழிற்சங்கங்களால் கைவிடப்பட்டுள்ள இந்தத் தொழிலாளர்களை பாதுகாக்க தோட்டத் தொழிலாளர்கள் முன்வர வேண்டும்.
பொலிஸ் முக்கிய சாட்சிகளை முன்வைக்கத் தவறியதால், 26 ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான ஜோடிக்கப்பட்ட வழக்கின், செப்டம்பர் 10 அன்று நடக்கவிருந்த விசாரணை டிசம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாரிய போராட்டங்கள் ட்ரம்ப் ஆட்சிக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தின் தொடக்கத்தைக் குறிக்கின்றன. ஆனால், ஒரு தெளிவான அரசியல் முன்னோக்கு மற்றும் பரந்த சூழ்நிலைமை குறித்த புரிதல் இல்லாமல், இந்த மகத்தான மக்கள் எதிர்ப்பு சிதறடிக்கப்படும் அபாயம் உள்ளது.
டேவிட் நோர்த் தலைமையிலான இந்த இணையவழிக் கருத்தரங்கு, வரலாற்று ஆசிரியர்களான டேவிட் ஆபிரகாம், ஜாக் பவுவெல்ஸ் மற்றும் மரியோ கீலர் ஆகியோரை ஒன்றிணைத்து, ஜேர்மன் பெருவணிக மற்றும் அரசு நிறுவனங்கள் ஹிட்லரின் எழுச்சியை எவ்வாறு சாத்தியமாக்கின என்பதை ஆராய்கிறது. அதே நேரத்தில், இந்தக் கருத்தரங்கு பாசிசத்திற்கு எதிரான எதிர்ப்பைக் கட்டியெழுப்புவதற்கான அவசர சமகாலப் படிப்பினைகளையும் வழங்குகிறது.
ஸ்ராலினிச CITU கூட்டமைப்புடன் இணைந்து செயல்படும் மெட்ராஸ் இரப்பர் தொழிற்சாலை (MRF) ஊழியர் சங்கம் (MEU), ஒரு MRF ஆலையில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை காட்டிக் கொடுத்தது.
ஏழு மில்லியன் மக்கள் பங்கேற்ற 2,700 க்கும் மேற்பட்ட தனித்தனி ஆர்ப்பாட்டங்கள், ஒட்டுமொத்தமாக நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரிய அரசியல் ஆர்ப்பாட்டங்களில் ஒன்றாகும்.
வெனிசுவேலாவிலும் அதற்கு அப்பாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு அசாதாரணமான முறையில் அதிகரித்துள்ளது. இதனை ஒப்புக்கொள்ள ட்ரம்ப் தயங்கவில்லை.