போல்சனாரோவினதும் இராணுவத்தினதும் சதித்திட்டங்களை தோற்கடி!

பிரேசிலில் சர்வாதிகார அச்சுறுத்தலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அக்டோபர் 2 ஆம் தேதி திட்டமிடப்பட்ட பிரேசில் ஜனாதிபதி தேர்தல், அசாதாரண சூழ்நிலையில் நடைபெறுகிறது. 1964ல் ஜனாதிபதி ஜோவோ கௌலார்ட்டை தூக்கியெறிந்த அமெரிக்க ஆதரவு ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்களுக்குப் பின்னர், ஒரு புதிய இராணுவ சர்வாதிகாரத்தை பற்றிய சாத்தியக்கூறுகள் பிரேசிலிய முதலாளித்துவ வர்க்கத்திற்குள் வெளிப்படையாக விவாதிக்கப்படுகின்றன.

ஏப்ரல் 19, 2022 அன்று இராணுவ தின விழாவில் ஜனாதிபதி ஜெயர் போல்சனாரோ (Credit: Isac Nóbrega/ PR)

பிரேசிலிய சோசலிச சமத்துவக் குழு (GSI), முதலாளித்துவத்திற்கும் முதலாளித்துவ அரசுக்கும் அடிபணிய வேண்டும் என்று கோரும் போலி-இடதுகளின் கோரிக்கைகளை எதிர்த்து, சர்வாதிகாரத்தின் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக சுயாதீனமாக அதன் சமூக சக்தியை அணிதிரட்டுமாறு தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கிறது.

ஆகஸ்ட் 16 அன்று பிரேசிலில் தேர்தல் பிரச்சாரத்தின் உத்தியோகபூர்வ தொடக்கமானது, பாசிச ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் உத்தியோகபூர்வ எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சி (PT - Workers Party) தலைமையில், அது தொழிலாள வர்க்கத்தின் சமூக, ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதாகவும் மற்றும் நாட்டில் பாசிசத்தை வலுப்படுத்துவதற்கு எதிராக இருக்கின்றது என்ற மோசடியான கூற்றுக்களை அம்பலப்படுத்தியது.

போல்சனாரோ அரசியல்ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டவரும் மற்றும் பலவீனமானவர் என்ற கருத்தை தொழிலாளர் கட்சி ஊக்குவிக்கும் அதே வேளையில், அவர் காணமல்போவது விரைவில் நிகழும் ஒரு விஷயம் மட்டுமே என்றும் கூறுகையில், போல்சனாரோ ஒரு ஆட்சிக்கவிழ்ப்புக்கான வெறித்தனமான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளார். இதன் மத்தியில் இருப்பது தொழிலாளர் கட்சி வேட்பாளரான முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு ஆதரவாக தேர்தல் நீதிமன்றம் (TSE) தேர்தலை கைப்புரட்டு செய்யும் என்ற தொடர்ச்சியான கூற்றுக்கள் உள்ளன.

இந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, வாக்குப்பதிவு இயந்திரங்களை கேள்விக்குள்ளாக்க இராணுவ வளங்களை திரட்டுமாறு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு போல்சனாரோ உத்தரவிட்டுள்ளார். இது ஒரு 'இணையான வாக்கு எண்ணிக்கையை' அமைக்கிறது. இது தேர்தல் நீதிமன்றத்தால் வெற்றி பெற்றவர் என அறிவிக்கப்ப்பட்ட வேட்பாளரை அங்கீகரிக்க வேண்டாம் என்ற முக்கிமான ஒரு நியாயப்படுத்தலை தளபதிகளுக்கு வழங்கும்.

ஜனாதிபதி ஏற்கனவே செப்டம்பர் 7 ஆம் தேதி வரவிருக்கும் பிரேசிலின் சுதந்திர தினத்தின் நினைவுதினத்தை தனது ஆட்சிசதிக்கான ஒரு பாரிய ஒத்திகையாக மாற்றியுள்ளார். அவர் தனது ஆதரவாளர்களை தேர்தல் நீதிமன்றத்திற்கு எதிராக 'கடைசியாக ஒரு முறை' தெருக்களில் இறங்க அழைத்துள்ளார். மேலும் ஒரு பாசிச கும்பலுக்கு அழைப்புவிட ரியோ டி ஜெனிரோவில் உள்ள கோபகபனா கடற்கரையில் அவர் வருகையை ஒட்டி மூன்று படைப்பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒரு பெரிய இராணுவ நிகழ்வை ஏற்பாடு செய்ய முயன்றார்.

Metrópoles இணைய தளம் மூலம் கசிந்த ஒரு உரையாடல், ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதி எப்படி வெளிப்படையாக போல்சனாரோ சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அத்தகைய ஆட்சி 'முதலீட்டாளர்களை பயமுறுத்தும்' என்ற எதிர்கட்சியின் எச்சரிக்கைகளைத் தோலுரித்து, ஒரு நில/கட்டிட தொழிலதிபரான ஜோஸ் கூரி, 'நிச்சயமாக பிரேசிலுடன் வணிகத்தை யாரும் குறைக்க மாட்டார்கள். அவர்கள் உலகம் முழுவதும் பல சர்வாதிகாரங்களுடன் வணிகத்தை வைத்திருக்கின்றனர்” என்றார்.

போல்சனாரோவின் சதித்திட்டத்தினை காங்கிரஸில் உள்ள இரண்டு பெரிய கட்சிகள் அவரை முழுமையாக ஆதரிக்கின்றன. லூலா கணித்தபடி, இது 'அவரை விட்டுக்கொடுக்க' விரும்பவில்லை, போல்சனாரோவின் தலைமை அதிகாரி சிரோ நோகுவேராவுடன் தனது பழைய கூட்டணியை மீண்டும் உருவாக்குவதில் லூலா தோல்வியுற்றார்.

அதே நேரத்தில், ஆயுதப்படைகள் 'தேர்தல் வன்முறை' அச்சுறுத்தல்கள் என்ற சாக்குப்போக்கில் முன்னோடியில்லாத வகையில் தேசிய அணிதிரட்டலுக்கு தயாராகி வருகின்றன. 1985ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக, ஆளுநர்களின் கோரிக்கையின்றி நாடு முழுவதும் செயல்பட படைப்பிரிவுகள் தயார் நிலையில் இருக்கும்.

அவசரகால ஆட்சிக்கான வழியைத் திறப்பதற்காக தேர்தல் நாளில் ஒழுங்கமைக்கப்பட்ட தொடர் வன்முறைகளை ஜனாதிபதி நிச்சயமாக கருத்தில் எடுத்துக் கொண்டிருக்கையில், இந்த தயாரிப்புகள் அதே குறிக்கோளுடன் இராணுவப் படைகள் சுதந்திரமாக தலையிடுவதின் அச்சுறுத்தலை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

பிரேசிலின் அரசியல் நெருக்கடியின் மேம்பட்ட மற்றும் வெடிக்கும் நிலைக்கு மாறாக, தொழிற்கட்சி தலைமையிலான எதிர்க்கட்சி பிரச்சாரத்தின் தொனியானது ஆகஸ்ட் 11 அன்று சாவோ பாலோ சட்ட பீடத்தில் முதலாளித்துவ சார்பு 'ஜனநாயகத்திற்கான கடிதங்களை' வாசித்ததன் மூலம் அமைக்கப்பட்டது.

தொழிற்கட்சி, தொழிற்சங்கங்கள் மற்றும் அதனுடன் இணைந்த போலி-இடது கட்சிகளால் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு பெரிய பாய்ச்சல் என்று இதனை ஆமோதிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகையில், இந்த கோழைத்தனமான 'கடிதங்கள்' போல்சனாரோவைப் பற்றியோ அல்லது ஜனநாயகத்தை தூக்கியெறிந்து இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான அவரது சதி பற்றி குறிப்பிடத் தவறிவிட்டன.

'ஜனநாயகம் மற்றும் நீதியைப் பாதுகாப்பதில்' என்ற முதல் ஆவணம், சாவோ பாலோ தொழிற்துறைக் கூட்டமைப்பு (FIESP) மற்றும் பிரேசிலிய வங்கிகளின் கூட்டமைப்பு (Febraban) தலைமையில் பெரிய வணிக சங்கங்களால் முன்வைக்கப்பட்டது. இரண்டாவது, 'சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்காக பிரேசிலியப் பெண்கள் மற்றும் ஆண்களுக்குக் கடிதம் (Estado Democrático de Direito)!' தொழிற்துறையினதும் மற்றும் நிதியத்தினதும் பெருமுதலாளிகளால் 'தனிப்பட்ட முறையில்' முன்வைக்கப்பட்டது. அதில் Itaú வங்கி மற்றும் தொழிற்துறை பேரரசுகளான சுசானோ, வோடோரான்டிம் மற்றும் கிளபின் போன்ற குடும்பங்களின் தலைவர்கள் அடங்குவர். இரண்டு ஆவணங்களிலும் கையெழுத்திட்டது முன்னாள் தொழிற்கட்சி தலைவர்கள் லூலா மற்றும் டில்மா ரூசெஃப் மட்டுமல்ல, நாட்டின் இரண்டு பெரிய தொழிற்சங்க கூட்டமைப்புகளான CUT மற்றும் Força Sindical மற்றும் தேசிய மாணவர் சங்கம் (UNE) ஆகியவையும் கையெழுத்திட்டன.

இந்த ஆவணங்களின் அரசியல் நோக்குநிலையை பற்றி பெர்னாண்டோ ஹென்ரிக் கார்டோசோ நிர்வாகத்தின் முன்னாள் நீதி மந்திரி ஜோஸ் கார்லோஸ் டயஸ் விவரித்தார். அவர் முதல் கடிதத்தின் அறிமுகத்தில் 'ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் மூலதனத்தையும் உழைப்பையும் ஒன்றிணைப்பதில்' அதன் 'முன்னோடியில்லாத' தன்மையை மேற்கோள் காட்டினார்.'

அத்தகைய கருத்து அதன் ஆசிரியர் நினைத்ததை விட அதிகமாகமானதை கூறுகிறது. இன்று ஜனநாயகத்தை பாதுகாக்கும் அதே முதலாளித்துவ அமைப்புகளும் ஆளுமைகளும் 1964 இராணுவ சதியை ஆதரித்ததையும், 21 ஆண்டு கால இரத்தக்களரி ஆட்சியை, இதில் 'பாதிக்கப்பட்டவர்களை விட பத்து மடங்கு கொல்லப்பட்டிருக்க வேண்டும்' என்று கூறி போல்சனாரோ கொண்டாடியதன் மூலம் அதன் 'முன்னோடியில்லாத தன்மையை' எடுத்துக்காட்டலாம்.

1964 ஆட்சிக்கவிழ்ப்பு, முதலாளித்துவ 'ஜனநாயகத்தை' பாதுகாப்பதற்காக வெளிப்படையாகவே நடத்தப்பட்டது. இது பிரேசிலிய முதலாளித்துவ பிரதிநிதிகளால் தனியார் சொத்துரிமை மற்றும் இலாபத்திற்கான உரிமைக்கான நிபந்தனையற்ற பாதுகாப்பு என புரிந்து கொள்ளப்பட்டது.

'இன்றைய பிரேசிலில் எதேச்சதிகார அத்துமீறல்களுக்கு இனி இடமில்லை என்பதையும், சர்வாதிகாரமும் சித்திரவதையும் கடந்த காலத்தைச் சேர்ந்தது' என்று கடிதங்கள் அறிவிக்கின்றன என்பதையும் இது அம்பலப்படுத்துகிறது. 1964 இல் ஒரு சர்வாதிகாரத்திற்கான 'இடத்தை' எது அனுமதித்தது என்பதை அவர்கள் விளக்கவில்லை. அதிலிருந்து என்ன அடிப்படை சமூக மற்றும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை. பிரேசிலின் அரசியல் யதார்த்தம் அதை அனுமதிக்கவில்லை என்றால், ஏன் ஒரு சர்வாதிகார முன்னெடுப்பு தெளிவாக நடந்து கொண்டிருக்கிறது.

இக்கடிதங்களின் ஆதரவாளர்களான தொழிற்சங்கவாதிகள் முதல் அடையாள அரசியல் தொழிலதிபர்கள் மற்றும் வங்கியாளர்கள் வரை அவை முதலாளித்துவ சமூகத்தின் உயர்மட்டத்தாலும் மட்டுமல்ல, 'ஆயிரக்கணக்கான போலீஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளாலும்' கையெழுத்திடப்பட்டுள்ளன என்பதையும், உயர்மட்ட அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவ உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைவரும் முதலில் அக்கடிதத்தைப் படித்தவர்கள் என்பதையும் வலியுறுத்துகின்றனர்.

ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு, வணிகத்திற்கு மோசமாக இருக்கும் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களாலும், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவால் எதிர்க்கப்படும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். 1977ல் இருந்து மற்றொரு 'ஜனநாயகத்திற்கான கடிதம்' என்பதை அவர்கள் தங்கள் முன்மாதிரியாக ஒப்புக்கொள்கிறார்கள். இது ஒரு அப்பட்டமான பாசிசவாதியான Goffredo da Silva Telles Júnior என்பவரால் ஆதரவளிக்கப்பட்டது. அவர் தனது அரசியல் வாழ்க்கையை அடிப்படைவாத இயக்கத்தில் கழித்ததுடன், 1964 சதிக்கும் ஆதரவளித்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முதலாளித்துவம், இராணுவம், ஏகாதிபத்தியம் மற்றும் பிரேசிலிய வலதுசாரிகள் கூட ஒரு சதிக்கு எதிரானவர்கள் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். அவர்கள் போராடுவதாகக் கூறப்படும் ஜனநாயகத்திற்கு எதிரான அச்சுறுத்தல், எந்த உண்மையான அரசியல் அல்லது சமூக அடிப்படையும் இல்லாமல், ஜனாதிபதி போல்சனாரோ மற்றும் ஒரு சில பைத்தியக்கார ஆலோசகர்களிடமிருந்து மட்டுமே வரும் என்கின்றனர்.

தொழிற்சங்கங்கள், தொழிற்கட்சி மற்றும் அதன் போலி-இடது துணைக்கோள்களில் உள்ள முதலாளிகளுக்கும் அவர்களது அடியாட்களுக்கும் இடையே உள்ள 'ஒற்றுமை' எல்லாம் நன்றாக இருக்கிறது என்ற கூற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. அரசாங்க நிர்வாகங்களுக்கிடையில் தினசரி நெருக்கடிகள் மற்றும் போல்சனாரோவுக்கு ஆதரவாக ஜெனரல்களின் இடைவிடாத அறிவிப்புகள் மற்றும் 1964-1985 இரத்தக்களரி இராணுவ சர்வாதிகாரத்தை நினைவுகூருவதும் பற்றிய தினசரி நெருக்கடிகள் வெறும் பின்னணியிலுள்ள இரைச்சலைத் தவிர வேறில்லை என்கின்றனர்.

இந்த அரசியல் நடவடிக்கையின் முக்கிய நோக்கம் முதலாளித்துவத்தின் இறுதி நெருக்கடி நிலையை பிரேசிலிய தொழிலாள வர்க்கத்திடம் இருந்து மறைப்பதாகும். சர்வதேச அளவில், இந்த நெருக்கடி வெகுஜனங்களின் வாழ்க்கைத் தரத்தின் மீது முன்னோடியில்லாத தாக்குதலை உருவாக்கியுள்ளதுடன், கொடிய தொற்றுநோய்கள் மற்றும் காலநிலை நெருக்கடிக்கு உலகின் ஆளும் வர்க்கங்களின் கோபம்மிக்க பிரதிபலிப்பைத் தூண்டி, மேலும் மூன்றாம் உலகப் போரை நோக்கி மனிதகுலத்தை இட்டுச் செல்கிறது. இந்த நிகழ்வுகள் ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் அடிப்படையில் பொருந்தாதவை. இவை பிரான்ஸ், பிரித்தானியா, இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளில் தீவிர வலதுசாரிகளினதும், வெளிப்படையான பாசிச சக்திகளினதும் எழுச்சியின் பின்னணியில் உள்ளன. மேலும் போல்சனாரோ ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளப்படும் அமெரிக்காவில் ஜனவரி 6 ஆம் தேதி ட்ரம்பின் சதிக்கு உந்துதலாக இருந்தன.

போல்சனாரோவின் சர்வாதிகாரத் தாக்குதல், வெளிப்படையான வன்முறை ஆட்சியின் மூலம் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நசுக்குவதை இலக்காகக் கொண்டிருந்தாலும், தொழிற்கட்சியும் அதன் கூட்டாளிகளும் சட்ட வழிமுறைகள் மூலம் அதே இலக்கைத் தொடர்கின்றனர். அதில் சர்வாதிகார அச்சுறுத்தல் பற்றி மக்களுக்கு மறைக்கும் மற்றும் தொழிற்சங்கங்களை ஒரு தொழிற்துறை காவல்துறையாக பன்படுத்துவதும் உள்ளடங்கும்.

பிரேசிலிய முதலாளித்துவத்தின் போட்டிப் பிரிவுகளின் இந்த நடவடிக்கைகள் அவசியமானவை, ஏனெனில் தொழிலாள வர்க்கம் தற்போதைய நிலைமையை தீவிரமாக எதிர்க்கிறது. உலக அளவில் முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக பெருகிய முறையிலான வேலைநிறுத்தங்களுடனும் பாரிய ஆர்ப்பாட்டங்களின் சக்திவாய்ந்த அலையுடன் அது ஏற்கனவே அதன் எதிர் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

பிரேசில் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஜனநாயகத்தின் நெருக்கடிக்குப் பின்னால் உள்ள புறநிலை உந்து சக்திகள் பற்றி எதுவும் 'ஜனநாயகத்திற்கான கடிதங்களில்' குறிப்பிடப்படவில்லை. பிரேசிலிய அரசியல் நெருக்கடியின் மூலகாரணத்தை எடுத்துக்காட்டினால், லூலாவை மீண்டும் தேர்ந்தெடுப்பது உட்பட கடிதங்களின் விளம்பரதாரர்களின் வெளித்தோற்றமான 'நம்பிக்கைகள்' ஒரு பெரிய ஏமாற்றுத்தனமானவை என்பதை தானாகவே அம்பலப்படுத்தும்.

தொழிற் கட்சியானது 42 ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சங்கவாதிகளாலும் நான்காம் அகிலத்திலிருந்து விட்டோடிய பப்லோவாத துரோகிகளாலும் நிறுவப்பட்டது. அவர்கள் ஒரு சமூகநல அரசுக்கான நாடாளுமன்ற பாதையையும் மற்றும் பிரேசிலில் சோசலிசத்தினையும் ஆதரித்தனர். பிரேசிலிய கம்யூனிஸ்ட் கட்சி (PCB) மூலம் முன்வைக்கப்பட்ட ஸ்ராலினிச இரண்டு கட்ட புரட்சி தத்துவத்தை தொழிற் கட்சி மறுவடிவமைத்தது. இத்தத்துவம் ஏற்கனவே 1964 இராணுவ சதிக்கான பாதையை வகுத்திருந்ததுடன் இராணுவ சர்வாதிகாரத்திற்கு அடிபணியவைக்கப்பட்ட பிரேசிலிய தொழிலாள வர்க்க எழுச்சியை திசைதிருப்பும் நோக்கத்திற்கு உதவியது. பிரேசிலிய முதலாளித்துவ அரசின் ஜனநாயக சாத்தியக்கூற்றில் அவர்கள் முன்வைத்த நம்பிக்கை, மூன்று தசாப்தங்களுக்கும் குறைவான காலத்தில், பாசிச சர்வாதிகாரத்தின் புதுப்பிக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு வழிவகுத்துள்ளது.

இப்போது, உழைக்கும் மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பிழந்த நிலையில், தொழிற் கட்சி மற்றும் அதன் போலி-இடது ஊக்குவிப்பாளர்கள் பிரேசிலிய முதலாளித்துவத்தை காப்பாற்ற ஒரு திவாலான முதலாளித்துவ கூட்டணியின் மூலம் அந்த பேரழிவுப் பாதையை மீண்டும் மீண்டும் செய்ய முன்மொழிகின்றனர்.

போல்சனாரோவின் ஆட்சிக் கவிழ்ப்புத் தாக்குதலுக்கு எதிரான எதிர்ப்புப் பிரகடனத்திற்கு முக்கிய பொருளாதாரத் துறைகள் ஆதரவளிப்பது ஆளும் வர்க்கத்தினுள் ஒரு பிளவை வெளிப்படுத்துவதுடன் மற்றும் இந்த சர்வாதிகாரத் திட்டத்தின் சாத்தியப்பாட்டில் சில பிரிவுகளுக்குள்ள நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்துகிறது. இதே பிரிவினர், தொழிற் கட்சி வழங்கும் அரசியல் அமைதிப்படுத்தும் வழிமுறைகளை, ஆட்சியின் தன்மையில் அத்தகையதொரு தீவிரமான மாற்றத்தை தயாரிப்பதற்கு தேவையான வழிமுறையாக பார்க்கின்றனர்.

ஆனால் முதலாளித்துவ வர்க்கத்தினருக்குள்ளான மோதல்கள் தீர்க்கப்படவில்லை. பொது மக்களின் முதுகுக்குப் பின்னால் ஆளும் உயரடுக்கு போல்சனாரோவால் வன்முறையாக கையகப்படுத்தல் அல்லது இராணுவத்தின் சுதந்திரமான தலையீட்டு சாத்தியம் பற்றி வெளிப்படையாக விவாதிக்கிறது. 'ஜனநாயகத்திற்கான கடிதங்களில்' கையொப்பமிட்டவர்கள் எவரும் பதிலளிக்க முடியாத ஒரு கேள்வி என்னவெனில்: டாங்கிகள் தெருவில் இறக்கப்பட்டால், அது போல்சனாரோவுக்கு எதிராக இருந்தாலும்கூட அவர்களை திரும்பப் படைமுகாமிற்கு அனுப்புவது யார்? என்பதாகும்.

1964 ஆம் ஆண்டில், பிரேசிலிய ஆயுதப்படைகள் 'விரைவான நடவடிக்கை' மற்றும் அடுத்த ஆண்டு தேர்தல்களுக்கு உறுதியளித்தன. இது 21 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து ஆயிரக்கணக்கானவர்களை தூக்கிலிடுவதற்கும், சித்திரவதை செய்வதற்கும், நாடுகடத்துவதற்கும் முன்பு கூறப்பட்டதாகும்.

இன்றைய சர்வாதிகார சதிகள் நிராயுதபாணியாக்கப்பட வேண்டும். தொழிலாள வர்க்கம் மட்டுமே அவ்வாறு செய்யக்கூடிய ஒரே சமூக சக்தியாகும். இத்தகைய போராட்டம், தொழிலாள வர்க்கத்தை தேசிய முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியச் செய்வதற்குப் பொறுப்பான தொழிற்கட்சி, தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடது கட்சிகளுடனான முழுமையான அரசியல் முறிவைக் கோருகிறது. தங்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் தொழிலாளர்களின் எதிர்த்தாக்குதல், சிக்கன நடவடிக்கை, போர் மற்றும் சர்வாதிகாரத்தின் காரணமான முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாதது. மேலும் அது ஒரு சோசலிச மற்றும் சர்வதேச மூலோபாயத்தின் மூலம் மட்டுமே செயல்படுத்தப்பட முடியும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) என்பது, பிரேசிலிய தொழிலாளர்களின் போராட்டமும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக உள்ள உலகத் தொழிலாள வர்க்க எழுச்சியின் நலன்களை நனவுடன் பிரதிநிதித்துவப்படுத்தி முன்னேடுக்கும் உலக அரசியல் கட்சியாகும். பிரேசிலில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவான Partido Socialista pela Igualdade (PSI - சோசலிச சமத்துவக் கட்சி) அமைப்பதே இப்போதுள்ள பெரும் பணியாகும். பிரேசிலிய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டத்தின் நீண்ட வரலாற்றில் இது ஒரு புதிய மற்றும் தீர்க்கமான கட்டத்தைத் திறக்கும்.

Loading