பிரிட்டிஷ் துருப்புகள் உக்ரேன் மண்ணில் “உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவ அபாய" செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேனுக்குள் 'முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக' பிரிட்டிஷ் ராயல் கடற்படை துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டு இருப்பதை ஒரு முன்னணி பிரிட்டிஷ் இராணுவ ஜெனரல் ஒப்புக் கொண்டார். லெப்டினன்ட் ஜெனரல் ராபர்ட் மகோவன், பிரிட்டிஷ் ஆயுதப் படைகளின் மூன்று துணை தலைமை தளபதிகளில் ஒருவர் என்பதோடு, 2020 வரை ராயல் கடற்படை அவர் கட்டளையின் கீழ் இருந்தது. மகோவனின் கருத்துக்கள் கடற்படையின் உத்தியோகபூர்வ இதழான Globe and Laurel இல் வெளியிடப்பட்டு இருந்தன.

கடற்படையின் முன்னாள் தலைவரான மகோவன், ராயல் மரைன்ஸ் கமாண்டோக்களுக்குப் பிறந்தநாள் செய்தி அனுப்பும் ஒரு பகுதியாக அவர் கருத்துக்களை வெளியிட்டார், 'உக்ரேனின் பயங்கர மோதலில் புதிய கமாண்டோ படை கருத்துரு நிஜமாகவே ஆக்கபூர்வமாக இருக்கும் காட்சிகளை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்,” என்றவர் அறிவித்தார்.

Commandant of the Marine Corps Gen. Robert B. Neller, left, awards the Legion of Merit to the Commandant General of the Corps of Royal Marines Maj. Gen. Robert A. Magowan during an honors ceremony at Marine Barracks Washington, October 10, 2017 [Photo: Cpl. Samantha K. Braun]

ஜனவரி 2022 இல், 45 வது கமாண்டோ குழுவைச் சேர்ந்த 350 கடற்படையினர் — இருண்ட, வடக்கு நோர்வே குளிர்காலத்தின் ஆழத்தில் இருந்து, கியேவில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தைப் போலந்துக்கு மாற்ற' — 'குறுகிய கால அறிவிப்பில் அனுப்பப்பட்டு' இருந்தனர் என்பதை மகோவன் வெளிப்படுத்தினார். மகோவன் தொடர்ந்து கூறினார், “பின்னர் ஏப்ரலில், முக்கிய இராணுவத்தினருக்குப் பாதுகாப்பு வழங்கி, இராஜாங்க பணியை மீண்டும் நிறுவுவதற்காக அவர்கள் அந்நாட்டிற்குத் திரும்ப சென்றனர். இவ்விரு கட்டங்களின் போதும், இந்த கமாண்டோக்கள் மிகவும் இரகசியமான சூழலில் உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவ அபாயம் கொண்ட பிற கூரிய செயல்பாடுகளுக்கும் ஒத்துழைத்தனர்,” என்றார்.

'பரந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பக்கவாட்டில், இந்த கோடை காலம் முழுவதும் நூற்றுக்கணக்கான உக்ரேனிய இராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதிலும் நாங்கள் பெரிதும் ஈடுபட்டு இருந்தோம். உக்ரேனிய கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டு வருகிறோம்,” என்று மகோவன் குறிப்பிட்டதாக எக்ஸ்பிரஸ் அவரை மேற்கோளிட்டது. 45 வது கமாண்டோ குழுவின் முக்கிய செயல்பாடுகளில் இதுவும் ஒன்று என்று குறிப்பிடும் அந்த வலைத்தளம், “நிலையான செயல் பிரிவாக செயல்படும் போது, 45 வது கமாண்டோ குழு உலகெங்கிலும் உள்ள ராயல் கடற்படை மற்றும் ராயல் போர்க்கப்பல்களின் துணை வாகனங்களுக்கான பாதுகாப்புப் படையாகவும் செயல்படுகிறது. அவர்கள் வெளிநாட்டு ஆயுதப் படைகளை அபிவிருத்தி செய்ய உதவுவதற்காக பிரிட்டனின் உள்நாட்டு எதிர்நடவடிக்கையிலும் பயிற்றுவிக்கும் குழுக்களை அனுப்புவதிலும் பங்களிக்கின்றனர்,” என்று குறிப்பிட்டது.

மகோவானின் கருத்துகளைக் குறித்து forces.net அறிவிக்கையில், எதிர்கால போர்க்களத்தில் 'நகர்வதற்கும் செயல்படுவதற்குமான திறன்' 'கட்டாயம் மிகவும் அவசியம்… இந்த செயல்பாடுகளை இன்று நாம் டொன்பாஸ் மற்றும் கருங்கடல் பகுதியில் பார்த்து வருகிறோம் என்று மகோவன் குறிப்பிட்டதாக தெரிவித்தது.

'ஒருசில இடங்களே மறைவிடங்களாக உள்ள நிலையில், அது அனைத்துக்குமான சூழலாக உள்ளது, அங்கே பறப்பதற்கும், தகவல் பரிமாறுவதற்கும், பார்த்து தாக்குவதற்கும் அவசியமான ஒரு சூழலான, மின்காந்த சூழலின் மேலாதிக்கத்தைப் பெற ஒரு நிரந்த போர் நடக்கிறது.”

அவர் தொடர்ந்து கூறினார்: 'அது உடைத்துக் கொள்வதற்கான, தீர்க்கமான முன்னெச்சரிக்கையுடன் நகர்வதற்கான, குறிப்பிட்ட தூரத்தில் இருந்து வழக்கு தொடுப்பதற்குமான மற்றும் திரும்ப இழுத்துக் கொள்வதற்குமான திறனுக்கு அழைப்பு விடுக்கிறது — யாராலும் தொடர்ந்து நீண்ட காலத்திற்கு அந்தப் போர்க்களத்தில் ஆதிக்கம் செலுத்த முடியாது என்கின்ற நிலையில், அது பல்ஸ்டு-செயல்பாடு என்றழைக்கப்படுகிறது.

'இது புதிய கமாண்டோ படையாகும், இது மிகவும் வழக்கமான அடிப்படையில், கேடு விளைவிக்கும் வழியில் மற்றும் அதைச் சுற்றி, முன்னோக்கி அனுப்பப்படுவதற்கான அதன் பயணத்தில் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது… இதில் பின்வாங்கல் இல்லை.'

ராயல் கப்பற்படை கமாண்டோக்கள் பிரிட்டனின் சிறப்பு நடவடிக்கைகள் திறன் கொண்ட கமாண்டோ படையாகும், அவர்கள் நீரிலும் நிலத்திலும் இலகுவாக செயல்படக்கூடிய படைப்பிரிவு என்பதோடு, ராயல் கடற்படையின் ஐந்து சண்டையிடும் ஆயுதப்படைகளில் இதுவும் ஒன்றாக உள்ளது. “உலகளவில் விரைவாக விடையிறுக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் உயரடுக்கு சண்டையிடும் படை' என்று marineswhose வலைத் தளம் விவரிக்கும் இந்தக் கப்பற்படை எவ்வாறு உக்ரேனிய போர் நடவடிக்கைகளில் பாரியளவில் சம்பந்தப்பட்டுள்ளது என்பதற்கு மகோவனின் அறிக்கைகள் ஒரு சிறு விபரத்தை வழங்குகிறது.

ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் ஏகாதிபத்திய பினாமி போரைத் தயாரித்து செய்து செயல்படுத்துவதில், பிரிட்டிஷ் இராணுவம் முழுமூச்சாக இருந்தனர். இந்தக் கப்பற்படை பிரிவுகள் நடத்திய 'கூரிய செயல்பாடுகள்' குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால் ரஷ்ய படையெடுப்புக்குப் பிந்தைய நாட்களில், Daily Mirror குறிப்பிடுகையில், சிறப்பு விமானப்படைச் சேவையின் பிரிட்டன் சிறப்புப் படைப்பிரிவின் முன்னாள் வீரர்களின் குழுக்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் உக்ரேனுக்குச் செல்ல கையெழுத்திட்டதாகக் குறிப்பிட்டது. ஏப்ரலில், டைம்ஸ் குறிப்பிடுகையில், அடுத்த தலைமுறை இலகுரக டாங்கி தகர்ப்பு ஆயுதங்கள் (NLAWS) கவசம்-இல்லா ஏவுகணைகளைப் பயன்படுத்துவதற்கு உக்ரேனிய ஆட்சேர்ப்புகளுக்கு பயற்சியளிப்பதில் பிரிட்டன் படைகள் சேவையாற்றி வருவதாகக் குறிப்பிட்டது.

Royal Marines, commando assault demo, Aeronavale Rafale M [Photo by Sam Wise / CC BY-SA 2.0]

இந்தாண்டு வெளியிடப்பட்ட மக்களவை நூலக ஆய்வுரைகள் இரண்டு, 2014 இல் இருந்து உக்ரேனில் பிரிட்டனின் அதிகரித்த இராணுவ தலையீட்டை விவரித்தது. “2014-2021 உக்ரேனுக்கான இராணுவ உதவி' என்பது மார்ச் 2022 இல் பிரசுரிக்கப்பட்டது. “உயிர்சேதம் விளைவிக்காத' இராணுவத் தளவாடங்களை அனுப்பும் அதன் நோக்கத்தை பிரிட்டன் ஏறக்குறைய அக்டோபர் 2014 ஆரம்பத்திலேயே அறிவித்திருந்ததாக அது குறிப்பிடுகிறது.

கியேவில் நடந்த 2014 அதிவலது ஆட்சிக் கவிழ்ப்பு சதியைத் தொடர்ந்து — இதில் ரஷ்ய-சார்பு ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் 2015 தொடக்கத்தில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் — 'மருத்துவம், தளவாட நகர்வுகள், பொதுவான தரைப்படையின் திறன்கள் மற்றும் உளவுத்துறை தகைமைக் கட்டமைத்தல்' ஆகியவற்றில் உக்ரேனிய ஆயுதப் படைகளை பயிற்றுவிக்க வடிவமைக்கப்பட்ட ஆபரேஷன் ஆர்பிட்டல் நடவடிக்கையை பிரிட்டிஷ் இராணுவம் தொடங்கியது. மார்ச் 2015 இல், அப்போதைய பாதுகாப்புத்துறை மந்திரி சர் மைக்கேல் ஃபாலொன் உக்ரேன் அரசாங்கம் விரும்பியதை அதற்கு வழங்கினார். 'உக்ரேன் எங்கள் நட்பு நாடு, அதற்கு தேவைகள் உள்ளன, அதன் கோரிக்கைகள் தளவாடங்களுக்காக இருந்தாலும் சரி அல்லது கூடுதல் பயிற்சிக்காக இருந்தாலும் சரி, அதன் கோரிக்கைகளுக்கு நாங்கள் விடையிறுத்தாக வேண்டும்,” என்றவர் கூறினார்.

2015 முழுவதும், ஆபரேஷன் ஆர்பிடல் விரிவாக்கப்பட்டது, அதில் 100 பிரிட்டிஷ் இராணுவத்தினர் உக்ரேனியப் படைகளுக்கு நகர்ப்புறப் போரில் பயிற்சி அளித்தனர். உக்ரேனிய இராணுவத்தின் எல்லா பிரிவுகளையும் உள்ளடக்கும் விதத்தில் இந்த திட்டம் வளர்ந்தது. 2016 இல், பிரிட்டனும் உக்ரேனும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு, உளவுத்துறை தகவல் பகிர்வு, பயிற்சி மற்றும் ஆயுதங்கள் சம்பந்தமாக 15 ஆண்டு கால புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. 2018 வாக்கில், ராயல் கப்பற்படையும் ராயல் கடற்படையும் இரண்டுமே உக்ரேனிய கடற்படைக்குப் பயிற்சி அளித்தன, அதேவேளையில் ஆரம்ப கட்டமாக 2.2 மில்லியன் பவுண்டு மதிப்பிலான தளவாடங்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டு இருந்தன.

அக்டோபர் 2020 இல், அவ்விரு அரசாங்கங்களும் தீர்மான ஒப்பந்தம் (Memorandum of Intent) ஒன்றில் கையெழுத்திட்டன, 2021 இல், தெளிவாக ரஷ்ய கருங்கடல் படைப்பிரிவுக்கு எதிராக, உக்ரேனிய கடற்படையைக் கட்டமைக்க, அவை நடைமுறையாக்க ஒப்பந்தம் (Memorandum of Implementation) ஒன்றில் கையெழுத்திட்டன. பிரிட்டனின் புதுப்பிக்கப்பட்ட இரண்டு கண்ணிவெடி அகற்றிகளைக் கைமாற்றவும், உக்ரேனிய கடற்படை தளங்களுக்கு ஏவுகணைகளை விற்பதற்கும் அவற்றில் இணைப்பதற்கும், அத்துடன் பயிற்சி மற்றும் ஒத்துழைப்புக்குமான வேலைகள் தொடங்கப்பட்டது. எட்டு விரைவு ஏவுகணை போர்க்கப்பல்கள் மற்றும் 'நவீன சிறிய போர்க்கப்பல் திறனை' ஏற்படுத்த கருங்கடல் மற்றும் அசோவ் கடலில் புதிய கடற்படை தளங்கள் கட்டப்பட இருந்தன. இதற்காக 1.7 பில்லியன் பவுண்டு விடுவிக்கப்பட்டது. ராயல் கடற்படை கருங்கடலில் தொடர்ச்சியான பயிற்சிகளில் பங்கேற்க போர்க்கப்பல்களை அனுப்பியது, ஜூன் 2021 இல் நடந்த கடைசி பயிற்சி, பிரிட்டிஷ் நடுத்தர போர்க்கப்பல் HMS Defender க்கு எதிராக ஒரு ரஷ்ய எல்லையோர ரோந்துப் படகு எச்சரிக்கை குண்டுகளைச் செலுத்துவதில் போய் முடிந்தது.

'ரஷ்ய படையெடுப்புக்குப் பின்னர் உக்ரேனுக்கு இராணுவ உதவி' என்ற நாடாளுமன்றத்தின் இரண்டாவது அறிக்கை, இந்த வாரம் வெளியிடப்பட்டது, அது பெப்ரவரி 24 இல் இருந்து உக்ரேனுக்குள் பாய்ச்சப்பட்டு வந்துள்ள நவீன ஆயுதங்கள், பயிற்சி மற்றும் இராணுவ ஆதரவு குறித்த மொத்த தொகுப்பையும் தொகுத்தளித்தது. ரஷ்யாவை இலக்கில் வைத்து எந்தளவிலான தளவாட பரிவர்த்தனைகள் மற்றும் செயல்பாட்டு திட்டமிடல்கள் இருந்தன என்பதை அது விவரிக்கிறது, அமெரிக்கா மற்றும் போலாந்துடன் சேர்ந்து, இதில் பிரிட்டன் முன்முகப்பில் உள்ளது.

இன்னும் அதிக ஆயுதங்களுக்கான உக்ரேனின் முடிவில்லா கோரிக்கைகளை ஒருங்கிணைக்க 30 நாடுகளைச் சேர்ந்த துருப்புகள் பணியமர்த்தப்பட்டுள்ள, ஸ்ருட்கார்ட்டில் உள்ள அமெரிக்க ஐரோப்பிய கட்டளையகத் தலைமையகத்தில் ஏப்ரல் மாதம் சர்வதேச நன்கொடை ஒருங்கிணைப்பு மையம் ஒன்று அமைக்கப்பட்டது. ஏறக்குறைய 50 நாடுகள் பங்கேற்கும் மற்றும் மாதந்தோறும் ஒன்றுகூடும் அமெரிக்க தலைமையிலான உக்ரேனிய தொடர்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

அமெரிக்க ஆயுதப் படை தளபதிகளின் தலைமை தளபதி ஜெனரல் மார்க் மில்லி இந்த நடவடிக்கையில் ஆர்வமாக இருந்தார். “நாம் பாதுகாப்பு உதவி வழங்கிய வேகம் ஒப்பிட முடியாதது. கோரிக்கைகள் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு, கோரப்பட்டவை பெறப்பட்டு, கொண்டு செல்லப்பட்டு உக்ரேனியர்கள் கரங்களில் கிடைப்பது வெறும் ஒரு சில நாட்களில் நடந்தது. சில சந்தர்ப்பங்களில், ஒரு வாரம் எடுத்திருக்கலாம், ஆனால் பெரும்பாலான நேரம் அது ஒரு சில நாட்களில் நடந்தன,” என்றார்.

பெப்ரவரி இருந்து இந்த மாதம் வரையில் மட்டும் அமெரிக்கா உக்ரேனுக்குள் 19.3 பில்லியன் டாலர் பாய்ச்சி உள்ள அமெரிக்காவின் இராணுவ உதவி வேறெந்த நாட்டையும் விஞ்சி நிற்கின்ற நிலையில், பிரிட்டனின் பொருளாதார அளவுடன் ஒப்பிட்டால் அதன் பொறுப்புறுதி மிகவும் பெரியளவில் உள்ளது.

நாடாளுமன்றத்தின் அறிக்கை பிரிட்டிஷ் மூலமான நிதி, ஆயுதம் மற்றும் பயிற்சியின் அளவைக் கோடிட்டுக் காட்டியது. முற்றிலும் இராணுவச் செலவில் சுமார் 2.3 பில்லியன் பவுண்டுகள் உக்ரேனுக்குப் போகிறது, இந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து கியேவுக்கு உதவுவதற்காக செலவிடப்பட்ட 3.8 பில்லியன் பவுண்டுகளில் ஒரு பகுதி. மற்றொரு 2.3 பில்லியன் பவுண்டுகள், குறைந்தபட்சம், அடுத்த ஆண்டு ஆயுதங்களுக்காக செலவிடப்படும்.

பிரிட்டன் உக்ரேனுக்கு NLAW மற்றும் ஜாவலின் டாங்கி-தகர்ப்பு ஏவுகணைகள், Starstreak வான் பாதுகாப்பு ஏவுகணைகள், Stormer சண்டையிடும் கவச வாகனங்கள், கட்டமைப்புகளைத் தகர்க்கும் வெடிகுண்டுகள், M-109 தானியங்கி பீரங்கிகள், M270 ராக்கெட் வீசிகள், ஹார்பூன் கப்பல்-தகர்ப்பு ஏவுகணைகள் ஆகியவற்றை வழங்கி இருப்பதுடன், AMRAAM விமானங்கள் தகர்ப்பு ஏவுகணைகள், ஹோவிட்சர்கள் மற்றும் ட்ரோன்களை வழங்கவும் உத்தேசித்துள்ளது. 200,000 உடல் கவச சாதனங்கள், தலைக்கவசங்கள், இரவு பார்வை உபகரணங்கள், குளிர்கால ஆடைகள் மற்றும் சேவையிலிருந்து ஒதுக்கப்பட்ட ஹெலிகாப்டர்களும் வழங்கப்பட்டு உள்ளன. பயற்சி நடவடிக்கைகள் பாரியளவில் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆபரேஷன் Interflex ஒவ்வொரு 120 நாட்களுக்கும் 10,000 புதிய மற்றும் ஏற்கனவே உள்ள உக்ரேனிய சிப்பாய்களுக்குப் பயிற்சி அளிக்க உத்தேசித்துள்ளது.

ஆனால் ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட விருப்பத்துடன் உள்ள நாடுகளின் எண்ணிக்கை இந்த அறிக்கையின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாகும். சான்றாக, 2015 இல் இருந்து அதன் சொந்த பயிற்சியளிப்புத் திட்டத்தைக் கொண்டுள்ள கனடா, எந்திர துப்பாக்கிகள், குறிபார்த்து சுடும் ஸ்னிப்பர் துப்பாக்கிகள், ஹோவிட்சர்கள், கவச வாகனங்கள், துப்பாக்கி தோட்டாக்கள், ட்ரோன்கள் மற்றும் குளிர்கால உடைகள் உட்பட 1 பில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ சாதனங்களுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

ஜேர்மனி ஏற்கனவே டாங்கி-தகர்ப்பு ஆயுதங்கள், MANPAD ஏவுகணைகள், தானியங்கி ஹோவிட்சர்கள், பதுங்குக் குழி ஏவுகணைகள், கவச வாகனங்கள், ராக்கெட் வீசிகள், ராடார், விமான-தகர்ப்பு டாங்கிகளை அனுப்பி உள்ளது. தானியங்கி படகுகள், உளவுபார்ப்பு ட்ரோன்கள் மற்றும் இன்னும் அதிக வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கவும் ஜேர்மனி ஒப்புக் கொண்டுள்ளது.

அந்த அறிக்கை குறிப்பிடுகிறது, 'ஆகஸ்ட் தொடக்கத்தில், ஐரோப்பாவிற்கான மந்திரி கேத்தரின் கொலோனா கூறுகையில், உக்ரேனுக்கு பிரெஞ்சு உதவியாக இதுவரை 2 பில்லியன் யூரோக்கள் செலவிடப்பட்டுள்ளது, மனிதாபிமான மற்றும் இராணுவ உதவி இதில் உள்ளடங்கும்,' என்றார்.

தரையிலிருந்து வானில் தாக்கும் ஸ்ட்ரின்ஜர் ஏவுகணைகள், டாங்கி தகர்ப்பு ஆயுதங்கள் மற்றும் எந்திர துப்பாக்கிகளை இத்தாலி அனுப்பி உள்ளது, அதேவேளையில் ஸ்ட்ரின்ஜர்கள், டாங்கி தகர்ப்பு ஆயுதங்கள், ராக்கெட்டுகள் மற்றும் ஹோவிட்சர்களை நெதர்லாந்து அனுப்பி உள்ளது. அது செக் குடியரசின் 90 T-72 டாங்கிகளையும் புதுப்பித்து வருகிறது. மோதல் பகுதிகளுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான அதன் நீண்டகால எதிர்ப்பை நோர்வே கைவிட்டு, இன்று வரையில், அது 4,000 டாங்கி-தகர்ப்பு ஆயுதங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பு, 22 M-109 ஹோவிட்சர்களை உக்ரேனுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. நீண்ட தூர ராக்கெட்டுகள் மற்றும் சிறிய ரக ட்ரோன்களை வழங்க இங்கிலாந்துடன் இணைந்து செயல்பட்டு வரும் நோர்வே, 160 ஹெல்ஃபயர் ஏவுகணைகளை வழங்க உத்தேசித்துள்ளது.

Loading