மஸ்கெலியா, சாமிமலையில் ஓல்டன் தோட்டத்தில் 22 தொழிலாளர்கள் மற்றும் இரண்டு இளைஞர்களுக்கு எதிரான சோடிக்கப்பட்ட வழக்கை விலக்கிக்கொள்ளுமாறு கோரி இலங்கை தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவானது மனு பிரச்சாரமொன்றை ஆரம்பித்துள்ளது. 1000 ரூபா நாளாந்த சம்பளம் கோரி தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது, தோட்ட நிர்வாகத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து நடவடிக்கை எடுத்ததன் காரணமாகவே இந்த தொழிலாளர்கள் மீது இந்தப் பொய் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ள இந்த மனுவில் உங்கள் ஒப்பத்தையும் ஏனைய விவரங்களையும் பதிவிட்டு, தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழு முன்னெடுக்கும் இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இணையவழி மனுவை இங்கே காணுங்கள்:
மேலும் படிக்க
- இலங்கையில் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான சோடிக்கப்பட்ட வழக்கு மூன்றாம் ஆண்டை எட்டியுள்ளது
- இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான சோடிக்கப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறு! வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்து!
- வேலை நீக்கம் செய்யப்பட்ட சக ஊழியர்களை மீண்டும் வேலையில் அமர்த்தக் கோரி இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்