யேமனில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் ஜெனரலை அபாயத்திற்குள்ளாக்கியது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலம்.

வியாழக்கிழமையன்று (டிசம்பர் 21, 2024) இஸ்ரேல் யேமனுக்கு எதிராக தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இத்தாக்குதல்களில் பல, நாட்டின் முக்கிய விமான நிலையத்தைத் தாக்கின. அப்போது உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் அங்கு விமானம் ஏறத் தயாராகிக் கொண்டிருந்தார். ஐ.நா. விமானக் குழுவில் ஒரு உறுப்பினர் காயமடைந்தார், மேலும் இந்த வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

டிசம்பர் 27, 2024 வெள்ளிக்கிழமை, யேமன் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து சனா சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு கோபுரத்தில் ஏற்பட்ட சேதத்தை ஒருவர் பார்வையிடுகிறார். [AP Photo/Osamah Abdulrahman]

டெட்ரோஸ் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் குழு நாட்டை விட்டு வெளியேறத் தயாராகிக் கொண்டிருந்த சனா சர்வதேச விமான நிலையத்தின் மீதான வான்வழித் தாக்குதல், இஸ்ரேலால் ஐ.நா. மீது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் கண்டனங்கள் மற்றும் லெபனானில் ஐ.நா. அமைதிப் படைகள் மீதான அடுத்தடுத்த இராணுவத் தாக்குதல்கள் ஆகியவற்றின் பின்னணியில் நடந்துள்ளது.

ராய்ட்டர்ஸிடம் பேசிய டெட்ரோஸ், இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கியபோது ஐ.நா. தூதுக்குழு விமானத்தில் ஏறத் தயாராக இருந்ததாகக் கூறினார். தான் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் விமான நிலைய முனையத்தை ஏவுகணைகள் தாக்கியபோது, தான் உயிர் பிழைத்திருப்பேனா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும் டெட்ரோஸ் தெரிவித்தார்.

குண்டுவெடிப்புகள் கட்டிடத்தை உலுக்கியது, காது செவிடாகும் அளவுக்கு சத்தம் இருந்தது, மறுநாள்வரை அந்த சத்தம் காதுக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது ஒரு நாள் கழித்தும் தனது காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தன என்று அவர் கூறினார்.

ராய்ட்டர்ஸ் அறிக்கை மேலும் தொடர்ந்தது:

விமான நிலையம் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதைப்பது விரைவில் தெளிவாகத் தெரிந்தது என்று டெட்ரோஸ் கூறினார், ஏறக்குறைய நான்கு குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு அங்கிருந்த மக்கள் அந்த இடத்தின் வழியாகக் “குழப்பமான நிலையில் ஓடினார்கள்” என்றும் விவரித்தார், குண்டுகளில் ஒன்று புறப்படுவதற்கு அவர் அமர்ந்திருந்த ஓய்வறைக்கு அருகில் வெடித்தது. அது அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் “பயங்கரமானதாக இருந்தது” என்றும் விவரித்தார்.

“நாங்கள் இருந்த இடத்திலிருந்து வெறும் சில மீட்டர் தொலைவில் தாக்குதல் நடந்ததால், நான் உயிர் பிழைப்பேனா என்பது உறுதியாகத் தெரியவில்லை,” என்று அவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார். “சிறிய விலகல் கூட நேரடித் தாக்குதலுக்கு வழிவகுத்திருக்கும்.”

தானும் தனது சக ஊழியர்களும் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு விமான நிலையத்தில் சிக்கித் தவித்ததாகவும், ட்ரோன்கள் தலைக்கு மேலே பறந்ததாகவும், அவை மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடும் என்ற கவலையை ஏற்படுத்தியதாகவும் டெட்ரோஸ் கூறினார். இடிபாடுகளுக்கிடையில், அவரும் அவரது சக ஊழியர்களும் வெடித்த ஏவுகணைத் துண்டுகளைக் பார்த்ததாகக் அவர் கூறியுள்ளார்.

“ பாதுகாத்துக்கொள்வதற்கான எந்த இடமும் அங்கு இல்லை. நாங்கள் இருப்பது நேரடியாக வெளியே தெரியும் அளவுக்கு இருந்தது. எதுவும் நடக்கலாம் என்று எதிர்ப்பார்த்தோம்”

ஹூத்தி கட்டுப்பாட்டிலுள்ள சபா செய்தி நிறுவனம் தெரிவித்ததாக அல் ஜசீரா அறிவித்துள்ளதாவது: விமான நிலையத்தில் மூவரும், சனாவிலிருந்து தென்மேற்கே 240 கிலோமீட்டர் (149 மைல்) தொலைவில் செங்கடலோரத்தில் அமைந்துள்ள முக்கிய துறைமுக நகரமான ஹொடெய்டாவில் மேலும் மூவரும் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டனர். மேலும், இத்தாக்குதல்களில் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

“மேற்கு கடற்கரை மற்றும் யேமனின் உள்நாட்டுப் பகுதிகளில் உள்ள ஹூத்தி பயங்கரவாத ஆட்சிக்குச் சொந்தமான இராணுவ இலக்குகள் மீது உளவுத் தகவல் அடிப்படையிலான தாக்குதல்களை” நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

சனா (Sanaa) விமான நிலையம், அத்துடன் ஹெஸ்யாஸ் (Hezyaz) மற்றும் ராஸ் கனாடிப் (Ras Kanatib) மின் நிலையங்கள் மற்றும் மேற்கு கடற்கரையில் உள்ள அல்-ஹுதைதா (Al-Hudaydah), சாலிஃப் (Salif) மற்றும் ராஸ் கனாடிப் (Ras Kanatib) துறைமுகங்களில் உள்ள தளங்கள் அனைத்தும் ஈரானிய ஆயுதங்களையும் மூத்த ஈரானிய அதிகாரிகளையும் நாட்டிற்குள் மறைமுகமாகக் கொண்டுவருவதற்கு கடத்த பயன்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

கெப்ரேயஸ் (Ghebreyesus) மற்றும் அவரது ஊழியர்கள் ஜோர்டானுக்கு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அல் ஜசீரா அறிக்கை தெரிவித்துள்ளது. ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபனி ட்ரெம்ப்ளே (Stephanie Tremblay) நியூயோர்க்கில் பத்திரிகை நிருபர்களிடம் கூறுகையில், தூதுக்குழுவானது யேமனில் மனிதாபிமான நிலைமை குறித்த விவாதங்களை முடித்துள்ளதாகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐ.நா. ஊழியர்களை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறினார்.

ட்ரெம்ப்ளே கூறினார், “மனிதாபிமான சட்டம் உட்பட சர்வதேச சட்டம் எல்லா நேரங்களிலும் மதிக்கப்பட வேண்டும் என்பதை தலைமைச் செயலாளர் நாயகம் வலியுறுத்துகிறார், மேலும் பொதுமக்கள் மற்றும் பொதுமக்களுக்கான அடிப்படை கட்டுமானங்களை படைத்துறைசாரா உள்கட்டமைப்பை மதிக்கவும் பாதுகாக்கவும் வேண்டுமென்று அனைவருக்கும் அவர் வேண்டுகோள் விடுக்கிறார்,” மேலும் “மனிதாபிமான நிவாரண பணியாளர்களை இலக்கு வைக்கப்படக்கூடாது, எல்லா நேரங்களிலும் அவர்கள் மதிக்கப்படவும் வேண்டும் மற்றும் பாதுகாக்கப்படவும் வேண்டும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஹூத்திகளின் அதிஉயர் புரட்சிகர தலைமைக் குழுவின் தலைவர் முகமது அலி அல்-ஹூத்தி, யேமன் மீதான தாக்குதல்களை “காட்டுமிராண்டித்தனமானது” மற்றும் “ஆக்ரோஷமானது” என்று அழைத்தார். காஸாவில் மோதல் நிறுத்தப்படும் வரை “அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆணவக்காரர்களுடனான மோதல்கள்” தொடர்ந்து நடக்கும் என்றும் அவர் கூறினார்.

நடந்த சம்பவத்திற்கு பதிலளித்த தீவிரப்படுத்தலுக்கு விடையிறுத்த ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres), தாக்குதல்கள் “குறிப்பாகப் ஆபத்தானவை” என்று அழைத்தார். ட்விட்டர்/எக்ஸ் இல் எழுதுகையில், “யேமனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சமீபத்திய தீவிரப்பாடு குறித்து நான் வருந்துகிறேன், மேலும் அந்தப் பிராந்தியத்தில் மேலும் தீவிரமடைந்துவரும் அபாயம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்” என்றார்.

யேமன் மீதான மிருகத்தனமான தாக்குதல்கள், 25 இஸ்ரேலிய ஜெட் விமானங்களால் நடத்தப்படுவதாகவும், அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்திருப்பதானது, ஈரானுக்கு எதிராக ஒருமுகப்படுத்தப்பட்ட மத்திய கிழக்கு எங்கிலும் ஏகாதிபத்திய போர் உந்துதலின் ஒரு குறிப்பிடத்தக்க தீவிரத்தன்மையை வெளிப்படுத்துவதாகும்.

மூன்று வாரங்களுக்கு முன்னர் ஏகாதிபத்திய ஆதரவிலான மற்றும் அல் கொய்தாவுடன் (al Qaeda) இணைந்த குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (Hayat Tahrir al-Sham- HTS) குழுவால் ஆல் பஷர் அல்-அசாத்தின் சிரியா நாட்டின் ஆட்சி தூக்கிவீசப்பட்டதைத் தொடர்ந்து யேமனுக்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இஸ்ரேல் எடுத்துவருகிறது.

வியாழக்கிழமை நடந்த வான்வழித் தாக்குதல், தலைநகர் சனாவில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய ஐந்து நாட்களுக்குப் பிறகு நிகழ்ந்தது. அப்போது, அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம், “அமெரிக்க மற்றும் கூட்டணி படையினர், பிராந்திய பங்காளிகள் மற்றும் சர்வதேச கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்கும் தொடர் உறுதிப்பாட்டின்” ஒரு பகுதியாக “ஹூத்தி நடவடிக்கைகளைச் சீர்குலைப்பதும் பலவீனப்படுத்துவதும்” இத்தாக்குதல்களின் நோக்கம் என்று தெரிவித்தது.

பென்டகனின் பொதுத் தொடர்பு வார்த்தை ஜாலங்களால், மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் போரின் பின்னணியில் உள்ள உண்மையை மறைக்க முடியாது. காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலை இப்போரின் மையப்புள்ளியாக உள்ளது. இதன் பின்னணியில், ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் தனது மேலாதிக்க நலன்களுக்கு கீழ்ப்படியச் செய்வதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய இலக்காகும்.

வியாழக்கிழமை நடந்த தாக்குதல்களுக்குப் பின்னர் கருத்து தெரிவித்த இஸ்ரேலின் பாசிச பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாகு, “நாங்கள் பணியை முடிக்கும் வரை ஈரானிய தீமை அச்சின் பயங்கரவாதக் கரங்களைத் தொடர்ந்து துண்டிப்போம்,” என்றார். மேலும், “நாங்கள் [ஹூத்திகளுடன்] இப்போதுதான் தொடங்கியுள்ளோம்,” என்றும் அவர் கூறினார்.

ஈரான் இந்தத் தாக்குதல்களை “சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு எதிரான வெளிப்படையான மீறல்” என்று கண்டித்துள்ளது. 2023 அக்டோபரில் தொடங்கிய காஸா மக்கள் மீதான படுகொலைகளின் முதல் மாதங்களிலிருந்தே ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம், ஹூத்திகளின் ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் பன்னிரெண்டுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

Loading